கடந்த மாதம் ஜீவன் என்ற பயங்கரவாதியினால் கடத்தி படுகொலை செய்யப்பட்ட திருச்செல்வம் கபில்நாத் என்பவரின் வழக்கு விசாரணைகளை முன்னெடுத்து வரும் சாவகச்சேரி நீதிபதி அவர்களுக்கு அனாமதேய கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதில் யாழ் மாநகரசபையின் உதவி முதல்வர் றீகன் மற்றும் ஈ.பி.டி.பி யின் தென்மராட்சி அமைப்பாளர் சார்ள்ஸ் ஆகியோர் ஆயுதங்கள் சகிதம் நீதிபதியின் வாசல்ஸ்தலத்திற்கு அண்டிய பகுதிகளில் நடமாடுவதாகவும் நீதிபதியை கொலை செய்யும் முயற்சிகளில் ஈடுபடுவதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதையடுத்து நீதிபதி அவர்கள் நீதித்துறைக்கு இவ்விடயத்தை தெரியப்படுத்தி இருப்பதாக தெரிய வருகின்றது. இவ்விடயம் குறித்து ஈழ மக்கள் ஐனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இது பொய்யான தகவல் என்றும் தேவை ஏற்படின் தமது உறுப்பினர்களை அழைத்து சென்று இது குறித்த உண்மை நிலவரங்களை அறிந்து கொள்ள வேண்டுமாயின் அதற்கு தாம் ஆட்சேபனை இல்லை என்றும் பொலிஸாரிடம் கருத்து தெரிவித்தும் உள்ளார். இது குறித்து நேற்றிரவு டான் தொலைக்காட்சியில் நடந்த செவ்வியின் போதும் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தனது கருத்தைத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது இவ்வாறிருக்க சாவகச்சேரி நீதிபதிக்கு இந்த அனாமதேய கடிதத்தை அனுப்பியவர்கள் யார் என்ற விடயமும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உதயன் மற்றும் சுடரொளி பத்திகையின் உரிமையாளரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான சரவணபவான் அவர்களும் யாழ் மாநகர சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்ந்த றெமீடியஸ் அவர்களும் இணைந்தே இந்த அனாமதேய கடிதத்தை சாவகச்சேரி நீதிபதி அவர்களுக்கு அனுப்பி வைத்ததாக அறியப்படுகின்றது.
இது இவ்வாறிருக்க சப்றா சரவணபவான் அவர்களுக்கும் அவரது மைத்துனர் திரு வித்தியானந்தனுக்கும் இடையில் முறுகல் நிலை தோன்றியுள்ளதாகவும் அறியப்படுகின்றது.
உதயன் மற்றும் சுடரொளி பத்திரிகைளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரச்சார ஊடகங்களாக பயன்படுத்தி தனது விருப்பங்களுக்கு மாறாக அதை நடத்தி வருவது குறித்து தனது அதிருப்பதிகளை அவர் வெளியிடத் தொடங்கியுள்ளார். திரு. வித்தியானந்தன் அவர்கள் ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளராக இருந்த போதிலும் குறித்த பத்திரிகைகளை நடுநிலையாக கொண்டு செல்லவே தான் விரும்புவதாகவும் கருத்து தெரிவித்து வருகின்றார். இது குறித்து உண்மைகள் இன்னும் வெளிவரும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’