வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 1 மே, 2010

ஈ.பி.டி.பி.யின் யாழ் மாவட்ட அமைப்பாளர் அவர்களது மேதினச் செய்தி!

சுமார் முப்பது வருடங்களின் பின்னர் எமது நாட்டில் சுமுகமானதொரு சூழ்நிலையில் இம்முறை உலக உழைக்கும் மக்களின் உரிமைக்கான தினத்தைக் கொண்டாட கிடைத்துள்ளமையையிட்டு மகிழ்ச்சி அடைகிறேன்.

உலக உழைக்கும் மக்களின் உரிமைகள் தொடர்பில் குரல் எழுப்பும் இத்தினத்தில் உழைக்கும் மக்கள் அனைவருக்கும் உரிய வரப்பிரசாதங்கள் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதே எமது அபிலாஷையாகும். உழைக்கும் மக்களின் வியர்வைக்கு ஏற்ப அவர்களுக்கான வேதனங்கள் வழங்கப்படுவதுடன் அவர்களது ஏனைய உரிமைகளும் வழங்கப்பட்டு, பேணப்படல் வேண்டும்.
தமிழ்பேசும் மக்களின் அரசியல் உரிமைகள் தொடர்பில் கடுமையாக உழைக்க வேண்டிய நிலையில் நாம் இருந்து வருவதுடன் அதனுடன் சேர்த்து உழைக்கும் மக்களது உரிமைகள் தொடர்பில் பாடுபட வேண்டிய தேவையும் எமக்கு உண்டு.
எனவே கிடைக்கும் சந்தர்ப்பங்களை கைநழுவ விடாமல் எமக்கான உரிமைகள் தொடர்பில் உழைப்பதற்கும் அதற்கான குரலை எழுப்புவதற்கும் எமது மக்கள் அனைவரும் ஓரணி திரண்டு முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.
உழைக்கும் மக்களின் உன்னதமான இந்நாளில் அம்மக்களது உரிமைகள் அனைத்தும் வெல்லப்பட்டு அவர்களது எதிர்கால வாழ்க்கை ஒளிமயமானதாக அமைவதற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’