வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 1 மே, 2010

பொதுத்தோ்தலில் தமிழ் மக்கள் வழங்கிய ஜனநாயகத் தீர்ப்பு மதிக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட வேண்டும் : சம்பந்தன் வலியுறுத்தல்

இலங்கையில் ஜனநாயக ஆட்சி இருக்கின்றது என்றால்- கடந்த பொதுத்தேர்தலில் மக்களால் தெற்கில் தெரிவு செய்யப்பட்ட ஜனநாயக அரசாங்கம் பதவியில் இருக்கின்றது என்றால்-
கடந்த பொதுத்தேர்தலில் தமிழ் மக்கள் அளித்த ஜனநாயகத் தீர்ப்பு மதிக்கப்பட வேண்டும் மற்றும் அங்கீகரிக்கப்பட வேண்டும். இவ்வாறு இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

திருகோணமலை-பாலையூற்று பகுதியில் விளையாட்டு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை திருகோணமலை பாராளுமன்றப் பிரதிநிதியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்றக் குழுத்லைவருமான இரா.சம்பந்தனுக்கு பாராட்டுக்கூட்டம் நடைபெற்றது. பாலையூற்று இளைஞர் செயலணிக்குழுவின் தலைவர் கோணேஸ்வரன் தலைமை வகித்தார்.
இக்கூட்டத்தில் பேசும்போது பூட்டான் தலைநகர் திம்புவில் நடைபெற்ற கலந்து கொண்ட இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் அவரின் வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸும் இந்தியப்பிரதமர் மன்மோகன்சிங்குடன் நடத்திய பேச்சுவார்த்தை பற்றி பிரஸ்தாபித்தார் சம்பந்தன்.

சம்பந்தன் தொடர்ந்து சொன்னதாவது:

பூட்டான் தலைநகர் திம்புவில் வைத்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, அவரின் வெளியுறவு அமைச்சர் ஜி;.எல்.பீரிஸ் ஆகியோர் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்குடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்பேச்சுவார்த்தையில் அவர்கள் வெளியிடப்பட்ட கருத்துக்கள் குறித்து இம்மேடையில் வைத்து பதில் சொல்வது பொருத்தமாக இருக்காது. ஆனால் ஒன்றை மாத்திரம் இங்கு கூறி வைக்க விரும்புகின்றேன்.
இலங்கையில் ஜனநாயக ஆட்சி இருக்கின்றது என்றால்- கடந்த பொதுத்தேர்தலில் மக்களால் தெற்கில் தெரிவு செய்யப்பட்ட ஜனநாயக அரசாங்கம் பதவியில் இருக்கின்றது என்றால்-
கடந்த பொதுத்தேர்தலில் தமிழ் மக்கள் அளித்த ஜனநாயகத் தீர்ப்பு மதிக்கப்பட வேண்டும் மற்றும் அங்கீகரிக்கப்பட வேண்டும். அவ்வாறு தமிழ் மக்களால் வழங்கப்பட்ட ஜனநாயகத்திர்ப்பு அங்கீகரிக்கப்படாத பட்சத்தில் தமிழ் மக்கள் சம அந்தஸ்து உள்ளவர்கள் அல்ல, இரண்டாம் தரப் பிரஜைகள் என்ற நிலை ஏற்படும். தமிழ் மக்களின் சம அந்தஸ்து அங்கீகரிக்கப்பட வேண்டும் கடந்த பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் ஜனாநாயகத்தீர்ப்பை இலங்கை அரசாங்கம் மற்றும் சர்வதேச சமூகம் மதித்து அங்கீகரிக்க வேண்டும்.
கடந்த பொதுத்தேர்தலின் முடிவுகள் பற்றி சிங்களப் பத்திரிகைகள் உட்பட அனைத்து பத்திரிகைகளும் வெளியிட்ட ஆய்வுகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஒரு மதிக்கத்தக்க மற்றும் அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய வெற்றியைப் பெற்றிருக்கிறது என்று தெரிவித்துள்ளன.- இவ்வாறு சம்பந்தன் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’