வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 9 மே, 2010

துணை முதல்வர் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த 9 வயது ரசிகை

சென்னை: துணை முதல்வர் மு.க.ஸ்டாலினின் போஸ்டர்களில் இருந்த அவரது படங்களைப் பார்த்து ரசிகையான கோவையைச் சேர்ந்த 9 வயது சிறுமி சென்னை க்கு வந்தபோது ஸ்டாலினை சந்தித்து பேச வாய்ப்பு கிடைத்ததால் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி விட்டார்.


கோவையைச் சேர்ந்தவர் பிரகாஷ்.இவரது மனைவி வித்யாலட்சுமி. இவர்களுக்கு அஸ்லேஷா என்ற 9 வயது மகள் உள்ளார். அஸ்லேஷாவுக்கு ஸ்டாலின் என்றால் கொள்ளைப் பிரியமாம். அவரது போஸ்டர்களில் இருந்த ஸ்டாலின் முகத்தைப் பார்த்து அவருடைய பரம விசிறியாகி விட்டார். எப்படியாவது ஸ்டாலினைப் பார்க்க வேண்டும், ஆட்டோகிராப் வாங்க வேண்டும், பேச வேண்டும் என துடித்தார்.
இந்த நிலையில் அஸ்லேஷாவின் அத்தை ராஜேஸ்வரி, ஒருமுறை கோவைக்கு வந்தபோது நான் குடியிருக்கும் ஆழ்வார்ப்பேட்டை பகுதியில்தான், எனதுவீட்டுக்கு அருகில்தான் ஸ்டாலினுடைய வீடும் இருக்கிறது என்று கூறியுள்ளார். இதைக் கேட்டதும் நான் எப்படியாவது ஸ்டாலினைப் பார்க்க வேண்டும் என அத்தையை நச்சரித்துள்ளார் அஸ்லேஷா. அவரும் சென்னைக்கு வரும்போது கண்டிப்பாக கூட்டிச் செல்கிறேன் என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் கடந்த வாரம் விடுமுறைக்காக அத்தை வீட்டுக்கு வந்த அஸ்லேஷா, ஸ்டாலின் வீட்டுக்கு கூட்டிச் செல்லுமாறு கூறியுள்ளார்.
இதையடுத்து ராஜேஸ்வரியும் ஸ்டாலின் வீட்டை அணுகி, தனது மருமகளின் ஆசையைச் சொல்லவே, அங்கிருந்த அதிகாரிகள் வியப்படைந்து, ஸ்டாலின்காதுக்கு விஷயத்தைக் கொண்டுசென்றனர். அவரும் ஆச்சரியமடைந்து நாளைக்கு வருமாறுகூறினார்.
இதைக் கேட்டு ராஜேஸ்வரிக்கும் ஆச்சரியமாகி விட்டது. அதைச் சொன்னதும் அஸ்லேஷா சந்தோஷத்தில் துள்ளிக் குதித்துள்ளார்.
அடுத்த நாள் காலை8 மணிக்கே ஸ்டாலின் வீட்டை அடைந்தனர் ராஜேஸ்வரி, அஸ்லேஷா, வித்யாலட்சுமி, தாத்தா ராமன், பாட்டி பார்வதி ஆகியோர்.
முதல் ஆளாக அவர்களை அதிகாரிகள் உள்ளே அனுமதித்தனர். சிறுமி அஸ்லேஷாவையும் குடும்பத்தினரையும் அன்புடன் வரவேற்ற ஸ்டாலினும், அவரது மனைவி துர்காவும், அஸ்லேஷாவுடன் பாசத்துடன் பேசினர். இதனால் அஸ்லேஷாவுக்கு என்ன பேசுவதென்றே புரியவில்லையாம்.
ஸ்டாலினுக்கு மாலை அணிவித்து அவருடன் நின்று போட்டோ எடுத்துக் கொண்டார் அஸ்லேஷா. பின்னர் துர்கா ஸ்டாலின் அவர்களுக்கு காபி, பிஸ்கட் உள்ளிட்டவற்றைக் கொடுத்து உபசரித்தார்.
பின்னர் தனது அருகில் அஸ்லேஷாவை அழைத்து நிறுத்திய படிப்பு உள்ளிட்டவை குறித்து வாஞ்சையுடன் விசாரித்தார் ஸ்டாலின். தனக்கு ரசிகையான கதையையும் கேட்டு மகிழ்ந்தார்.
அப்போது அஸ்லேஷா, அங்கிள், நான் உங்கள் விசிறி. உங்களை எனக்கு ரொம்பவும் பிடிக்கும். நானும் உங்களைப் போல் உயர்ந்த நிலைக்கு வர வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்? என்று கேட்கவே, சிரித்த ஸ்டாலின், நீ என்னைவிட சீக்கிரமாகவே பெரிய ஆளாக வந்துவிடுவாய் என்று வாழ்த்தினார். பின்னர் சிறுமியின் ஆசை தீர அவருடனும், குடும்பத்தினருடனும், சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த ஸ்டாலின் மற்றும் துர்கா ஸ்டாலின் அவர்களை பிறகு அன்புடன் வழியனுப்பி வைத்தனர்.
எப்போதும் பிசியாக இருக்கும் ஒரு தலைவர், துணை முதல்வர் ஸ்டாலின், தங்களிடம் மனம் விட்டு மிக எளிமையாக பேசிய பழகிய விதம் அஸ்லேஷாவையும், அவரது குடும்பத்தினரையும் பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி விட்டதாம்.
இந்த சந்திப்பு குறித்து அஸ்லேஷா கூறுகையில் ஸ்டாலின் அங்கிளை நேரில் பார்க்க வேண்டும் என்ற எனது நீண்டகால ஆசை நிறைவேறிவிட்டது. என்னிடம் மிகவும் அன்பாகவும், பாசமாகவும் பேசினார். அடுத்த முறை கோடை விடுமுறையில் இங்கு வரும்போது நான் அவரை மீண்டும் சந்திப்பேன். அவர் கோவை வரும்போது எங்கள் வீட்டுக்கு வருமாறு அவரை அழைப்பேன் என்றார் படு சந்தோஷத்தோடு

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’