அரசியல் தஞ்சம் கோரிய 75 இலங்கையர்கள் தொடர்பாக விசாரணை நடத்தும் பொருட்டு அவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள பகுதிக்கு மலேசியாவுக்கான பிரதி இலங்கை உயர்ஸ்தானிகர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.
அரசியல் தஞ்சம் கோரி அவுஸ்திரேலியாவுக்குப் படகில் சென்று கொண்டிருந்த போது மலேசியப் பொலிஸாரால் இவர்கள் அண்மையில் கைது செய்யப்பட்டு, முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.தடுத்து வைக்கப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகளை நடத்துவதற்காகப் மலேசியாவுக்கான பிரதி இலங்கை உயர்ஸ்தானிகர் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் 6 பெண்களும் 8 சிறுவர்களும் உள்ளனர்.
இவர்கள் சில தினங்களுக்கு முன்னர் மலேசியக் கடற்பகுதியில் சேதமடைந்த படகொன்றில் தத்தளித்துக் கொண்டிருந்த போது அந்நாட்டுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்ததாக ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் கோரி பயணித்ததாக மலேசிய பொலிஸாரிடம் அவர்கள் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.













.jpg)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’