அவசரகாலச்சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை மீதான விவாதத்தை இரண்டு நாட்களுக்கு நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரிமாளிகையில் நேற்று நடைபெற்ற ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழுக்கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் தீர்மானம் தொடர்பில் சபாநாயகர் தலைமையில் இன்று திங்கட்கிழமை கூடுகின்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் இறுதி தீர்மானம் எட்டப்படவிருக்கின்றது. ஏழாவது பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள புதிய உறுப்பினர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கும் வகையிலேயே அரசாங்கம் இத்தீர்மானத்தை எட்டியுள்ளது.
இதேவேளை அரசாங்கம் அவசரகாலசட்டத்தை நீடிப்பதற்கான பிரேரணையை சபையில் முன்வைப்பது இதுவே இறுதி சந்தர்ப்பமாக அமையலாம் என்றும் அரச வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆறாவது பாராளுமன்றத்தின் இறுதி நாளான ஏப்ரல் 6 ஆம் திகதி அவசரகால சட்டத்தை நீடிப்பதற்காக சபை கூடிய போது அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்கான யோசனை முன்வைக்கும் இறுதி சந்தர்ப்பமாக இது அமைய வேண்டும் என்பதே அரசாங்கத்தின் எதிர்ப்பார்ப்பாகும். என்று முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்ரமசிங்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்
-














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’