தமிழீழ விடுதலைப்புலிகளினால் தகர்த்தெறியப்பட்ட கிளிநொச்சி மின்சார நிலையத்தை ஜப்பான் நாட்டின் உதவியுடன் 2.96 பில்லியன் ரூபா செலவில் நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது என அமைச்சரவைப்பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
தேசிய கல்வி ஆணைக்குழுவின் ஊடாக தேசிய கல்விக்கொள்கையை நிறுவுவதற்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் சொன்னார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கிளிநொச்சி மின்சார நிலையம் விடுதலைப்புலிகளினால் 1983 ஆம் ஆண்டு தகர்த்தெறியப்பட்டுள்ளது. அவற்றை மீள் நிர்மாணம் செய்வதற்கு ஜப்பான் 2.96 பில்லியன் ரூபாவை வழங்குவதற்கும் தீர்மானித்துள்ளது. முதற்கட்டமாக 1.17 பில்லியன் ரூபாவும் 1.79 பில்லியன் ரூபா இரண்டாவது கட்டமாகவும் பெற்றுக்கொள்ளப்படும். மின் நிலையத்திலிருந்து உற்பத்தி செய்யப்பட்டு மின்சாரம் 2011 ஆண்டில் தேசிய மின் தொகுதியில் இணைத்துக்கொள்ளப்படும் என்றார்
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’