ஜி-15 நாடுகளின் உச்சி மாநாடு நாளை ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஆரம்பமாகவுள்ளது. இம்மாநாட்டில் இலங்கை ஜனாதிபதி உட்பட் 18 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
இம்மாநாட்டின் தலைமைப்பதவி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு, ஈரான் ஜனாதிபதி அஹமதி நிஜாட்டால் வழங்கப்படவிருக்கிறது.
இம்மாநாட்டின்போது நாடுகளிற்கு இடையிலான நல்லுறவு, அபிவிருத்தி மற்றும் சர்வதேச விவகாரம் சம்பந்தமாக கலந்துரையாடப்படவுள்ளது.
ஜி-15 நாடுகள் அமைப்பில் ஈரான் , அல்ஜீரியா ஆர்ஜென்டினா, பிரேசில் சிலி, எகிப்து, இந்தியா, இந்தோனேசிய, ஜேமேக்கா, கென்யா, நைஜீரியா, மலேசியா, மெக்ஸிக்கோ, பெரு, செனகல், இலங்கை மற்றும் சிம்பாவ்வே ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’