வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 7 மே, 2010

11 வயதுடைய பாடசாலை மாணவியை காணவில்லை: யாழில் பரபரப்பு

யாழ்பாணம் மானிப்பாய் பகுதியில் 11 வயதுடைய பாடசாலை மாணவியொருவர் காணாமல் போயுள்ளதை தொடர்ந்து அப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று காலையில் மானிப்பாயில் உள்ள பாடசாலைக்குச் செல்லும் போதே மாணவி காணாமல் போயுள்ளார்.

இதனை தொடர்ந்து மாணவியின் தாயார் அப்பகுதியில் உள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும், இச் சம்பவம் தொடர்பில் பொலிசார் தீவிர விசாரணைகளில் ஈடுப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் யாழ்பாணத்தின் கட்டளை தளபதி, இது போன்ற சம்பவங்களின்; போது தமக்கு உடனடியாக தெரிவிக்குமாறும், இவ்வாறான சந்தர்ப்பங்களில் நாங்கள் சரியான நடவடிக்கைகளை எடுக்கயிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
மேலும் இவ்வாறான கடத்தல், கொலை போன்ற சம்பவங்களால் தமக்கும் தமது கட்சிக்கும் சேறு பூசும் செயலாக அமைகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் டக்களஸ்தேவானந்தா தெரிவித்திருந்தமை குறிப்பிடதக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’