நோர்வேயிலுள்ள இலங்கைத் தூதரகம் தாக்கப்பட்டமை தொடர்பாக எட்டுத் தமிழர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டவர்களில் பலர் இளைஞர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது
. இதன்படி பிரசன்னா பற்குணம், அன்ரனி ஜொனதாசன், தேவராஜா கிருஸ்ணகுமார் தர்மலிங்கம், இன்பராஜ் தவராசா, சஜீதன் பார்வதிதாசன், விதுசன் சுரேஸ், ஜஸ்வத்த புஸ்பராஜா மற்றும் கௌதம் கருணாகரன் ஆகியோருக்கெதிராகவே வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது நோர்வேயிலுள்ள இலங்கைக்கான தூதுரகம்மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த 08பேருக்கு ஆதரவாக வாதாட இதுவரை எவரும் முன்வரவில்லையென நோர்வே தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’