தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இந்தியாவிற்குள் பிரவேசிக்க அனுமதி மறுக்கப்பட்டு சிவாஜிலிங்கம் சென்னை விமான நிலையத்தில் வைத்து அதிகாரிகளினால் தடுக்கப்பட்டதாக மற்றுமொரு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தின் ஊடாக இந்தியாவிற்குள் பிரவேசிக்க சிவாஜிலிங்கம் முயற்சித்த போதிலும், தமிழக அதிகாரிகள் நாட்டிற்குள் பிரவேசிக்க அனுமதிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
எம்.கே.சிவாஜலிங்கம் கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களின் போது தனித்து போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தேர்தல்களின் போது சிவாஜிலிங்கம், இந்திய அரசாங்கத்தின் இலங்கை தொடர்பான நிலைப்பாட்டை கடுமையாக விமர்சித்திருந்தார்.
சிவாஜிலிங்கம், சென்னையிலிருந்து மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
பொதுத் தேர்தல் தொடர்பில் சிவாஜிலிங்கம் வெளியிட்ட கொள்கைப் பிரகடனத்தில் இந்திய ஆட்சியாளர்களின் கொள்கைகளுக்கு புறம்பான வகையில் கருத்துக்கள் வெளியிடப்பட்டிருந்தன.
எவ்வாறெனினும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்திற்கு என்ன காரணத்திற்றாக அனுமதி மறுக்கப்பட்டது என்பது குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.
-














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’