இராமேஸ்வரம் அருகே கடற்பகுதியில் மர்மமான முறையில் பிளாஸ்டிக் படகு நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இலங்கையில் இருந்து இந்தப் படகில் தப்பி வந்தவர்கள் மீனவர்களா அல்லது விடுதலைப் புலிகளா என்று பொலி ஸார் விசாரித்து வருகிறார்கள்.
இராமேஸ்வரம் சேரான்கோட்டை கடற்கரையில் நேற்றுமுன்தினம் அதிகாலை இலங்கையைச் சேர்ந்த ஒரு பிளாஸ்டிக் படகு நிறுத்தப்பட்டிருந்தது. இந்தப் பட கில் வந்தவர்கள் படகை கடற்கரையிலேயே நிறுத்தி விட்டு தப்பி ஓடி இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. மர்மமான முறையில் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த இந்தப் படகு குறித்து அப்பகுதியைச் சேர்ந்த மீனவர் கள் பொலிஸா ருக்கு தகவல் தெரிவித்தனர். தனிப் பிரிவுப் பொலிஸார் விரைந்து சென்று அந்தப் படகை பார்வையிட்டு சோதனை செய்தனர்.
அந்தப் படகு வெள்ளை மற்றும் பச்சை நிறத்தில் வர்ணம் பூசப்பட்டிருந்தது. பட கின் முன்பகுதியில் "எஸ்.எஸ்.கே. 0927' என்று எழுதப்பட்டிருந்தது. பக்கவாட்டில் மயில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. "8410 கிராஸ் தெரு, கொழும்பு' என்றும் எழுதப் பட்டிருந்தது. மேலும் அந்தப் படகில் 2 நண்டு வலைகள், எஞ்சின் வேகத்தை அதிகரிக்கக் கூடிய 2 ரோலர் காற்றாடிகள், பாதியளவு டீசல், மண் எண்ணையுடன் 2 கான்கள் இருந்தன. 9.9 குதிரை சக்தி கொண்ட எஞ்சின் அந்தப் படகில் பொருத் தப்பட்டிருந்தமை தெரியவந்தது.
இதுகுறித்து புலனாய்வுத் துறை அதி காரி ஒருவர் கூறும்போது
இராமேஸ்வரம் சேரான்கோட்டை கடல் பகுதியில் மர்மமான முறையில் பிளாஸ்டிக் படகு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த வகை படகுகளை இலங்கை மன்னார் பகுதியில் உள்ள மீனவர்கள்தான் மீன்பிடிக்கப் பயன்படுத்து வார்கள். எனவே, இந்தப் படகில் வந்த நபர் கள் இலங்கையைச் சேர்ந்த மீனவர்களா? அல்லது அவர்களது படகைக் கடத்திக் கொண்டுவந்து வேறு யாராவது தப்பிச் சென்று இருக்கலாமா என்பது குறித்து தீவிர மாக விசாரித்து வருகிறோம். இதை யொட்டி இராமேஸ்வரம் பஸ் நிலையம் மற் றும் ரயில் நிலைய பகுதிகளில் கண்காணிப் புப் பணிகளைத் தீவிரப்படுத்தி உள் ளோம் என்று தெரிவித்தார்.
-














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’