வட பிராந்திய ஐக்கிய தொழிலாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் ஏற்கனவே முன்வைத்திருந்த கோரிக்கைகளுக்கு அமைவாக நேற்றைய தினம் (13) மேற்படி சங்கத்தின் பிரதிநிதிகளையும் யாழ் மாநகர சபையின் முதல்வர் பிரதி மேயர் ஆணையாளர் செயலாளர் உள்ளிட்ட நிர்வாகத் தரப்பினரையும் சந்தித்து ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்துரையாடினார். யாழ் மாநகர சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலின் போது மேற்படி தொழிலாளர் சங்கத்திற்கான அலுவலகக் கட்டிடத்தை அமைப்பதற்கான நிதியை வழங்க தான் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் அவர்கள் தெரிவித்ததுடன், இக்கட்டிடத்திற்கான காணி யாழ் மாநகர சபையினால் ஒதுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
மாநகர சபையில் நிலவும் தொழிலாளர்களுக்கான வெற்றிடங்களை உடன் நிரப்புவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென இங்கு சுட்டிக் காட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மாநகர சபைத் தொழிலாளர்கள் தங்களது பணிகளை உரிய முறையில் மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொண்டதுடன், சிறந்த முறையில் கடமையாற்றும் தொழிலாளர்களுக்கு மேலதிக ஊக்குவிப்பு கொடுப்பனவுகளை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுமென்று தெரிவித்தார்.
மாநகரசபை எல்லைக்குள் உள்ள வளங்களை உரிய முறையில் பயன்படுத்த வேண்டும் எனத் தெரிவித்த அமைச்சர் அவர்கள், தேவைகள் ஏற்படும்போது வெளியிலிருந்து வளங்களைப் பெற்றுக் கொள்வதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென்றும் தெரிவித்தார்.
மேற்படி தொழிலாளர்களுக்கான இலகுக்கடன் வசதிகளை விஸ்தரிப்பது தொடர்பில் கவனஞ் செலுத்துவதாகத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஓய்வூதியம் தொடர்பிலான பிரச்சினைகள் உடன் தீர்க்கப்படும் என்றும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’