வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 29 ஏப்ரல், 2010

மின் கட்டணத்தை விரைவாகச் செலுத்த மக்கள் வங்கிக் கிளைகளில் கரும பீடங்கள் இன்று வைபவ ரீதியாகத் திறந்து வைப்பு

மின்சாரக் கட்டணங்களைச் செலுத் தும் நடைமுறையை விரிவுபடுத்தும் நோக்கில் புதிதாக அமைக்கப்பட்ட விசேட கருமபீடங்கள் இன்று வியா ழக்கிழமை சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளன.
சுன்னாகம், சாவகச்சேரி, நெல்லி யடி ஆகிய பிரதேசங்களிலுள்ள மக் கள் வங்கிக் கிளைகளிலேயே இந்த விசேட கரும பீடங்கள் திறந்து வைக் கப்படவுள்ளன.
இந்த விசேட கருமபீடங்கள் மூலம் மின் கட்டணமாக செலுத்தும் தொகை " ஒன்லைன் மூலமாக உடனடியாகவே மின் பாவனையாளர்களின் மின் கணக் கில் வரவு வைக்கப்படும்.
இலங்கை மின்சார சபையின் உயர் அதிகாரிகள் மற்றும் மக்கள் வங்கி யின் உயர் அதிகாரிகளினால் திறந்து வைக்கப்படவுள்ள இந்த புதிய கரும பீடங்கள் மூலம் மின் பாவனையாளர் தமது கணக்கில் வரவு வைப்பதற்கு ஏற்படும் தாமதங்களைத் தவிர்த்துக் கொள்ள முடியும் என இலங்கை மின் சார சபையின் பிரதிப் பொது முகா மையாளர் எஸ்.முத்துரட்ணானந்தம் தெரிவித்தார்.
ஏற்கனவே இந்த நடைமுறை இலங்கை மின்சார சபை வடமாகாண பிரதிப் பொது முகாமையாளர் காரியால யத்திலும் மக்கள் வங்கி ஸ்ரான்லி வீதிக் கிளையிலும் யாழ்.பிரதம தபாலகத்தி லும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை மின்சார சபையின் அனுசரணையுடன் பரந்து நிறுவப் படும் இந்தக் கருமபீடங்கள் அவசி யம் ஏற்படும் பட்சத்தில் மேலும் விரி வுபடுத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’