பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் வழக்குத் தாக்கல் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ் அத்தியட்சகர் ஜே.ஆர்.ஜயவர்தன என்பவரினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்புச் செயலாளரினால் தமக்கு கட்டாய லீவு வழங்கியுள்ளதாக அவர் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
30 ஆண்டுகால பொலிஸ் சேவையில் தாம் ஒருபோதும் குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
பக்கச் சார்பாக செயற்பட்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ஒழுக்கயீனமாக செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு தமக்கு கட்டாய லீவு வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தேர்தல் சட்டங்களை உரிய முறையில் அமுல்படுத்த தாம் மேற்கொண்ட முயற்சிகளுக்கு பதிலடியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
-














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’