வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 30 ஏப்ரல், 2010

நித்யானந்தா: பெண்கள் சிறையில் அடைப்பு!


நான் ஆண் அல்ல என்று தன்னை விசாரித்து வரும் கர்நாடக சிஐடி போலீசாரிடம் நித்யானந்தா வாக்குமூலம் அளித்து அதிர்ச்சி தந்துள்ளார்.
கடந்த 21ம் தேதி கைது செய்யப்பட்ட நித்தியானந்தாவை போலீஸ் காவலில் எடுத்து கர்நாடக சிஐடி போலீசார் விசாரித்து வந்தனர் Read: In English

இந் நிலையில் இன்றுடன் நித்தியானந்தாவின் காவல் முடிவடைந்தது. இதையடுத்து அவரை ராம்நகர் நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர்.

பெண்கள் சிறையில் நித்யானந்தா அடைப்பு:
அவரை மே 12ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதின்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ராமநகர் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட நித்யானந்தா அங்கு பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் பெண் கைதிகள் இல்லாததால் அவரை அங்கு அடைத்தனர்.

நான் ஆண் அல்ல..:

முன்னதாக போலீசாரிடம் வாக்குமூலம் தந்த நித்யானந்தா, நான் ஆணே அல்ல என்றும், இதனால் நான் எப்படி யாரையும் கற்பழிக்க முடியும் என்று கேட்டு கூறி அதிர்ச்சி தந்தார்.
இதையடுத்து அவர் ஆணா, பெண்ணா என்பதைக் கண்டறியும் பாலினச் சோதனை நடத்த போலீசார் முடிவு செய்தனர்.
ஆனால், அவரது பாஸ்போர்ட்டில் அவர் ஆண் கூறியுள்ளதையும், அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ சோதனைகளிலும் அவர் ஆண் என்று கூறப்பட்டுள்ளதாலும் ஆண்மை பரிசோதனை நடத்தும் முடிவை போலீசார் கைவிட்டுவிட்டனர்.
இதற்கிடையே, தனக்கு ஜாமீன் கோரி ராம்நகர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தல் நித்தியானந்தா தாக்கல் மனு மீது நேற்று விசாரணை நடைபெற்றது.
போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்க தொடர்ந்து நித்தியானந்தா மறுத்து வருவதால், ஜாமீன் வழக்குவதற்கு அரசு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நித்தியானந்தாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை மே மாதம் 3ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் ஆசிரமத்தில் சந்தனக் கட்டைகளை வைத்திருந்ததாக தாக்கலான வழக்கில் அவருக்கு நீதிமன்றம் முன்ஜாமீன் தந்துள்ளது.
இதற்கிடையே, ஆசிரமத்தின் சொத்து விபரங்கள் தொடர்பான சில தகவல்களை நித்தியானந்தா கூறியதாக கர்நாடக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் கர்நாடக போலீசின் தணிக்கை பிரிவைச் சேர்ந்த 10 பேர் கொண்ட குழு நித்தியானந்தா ஆசிரமத்தின் சொத்து விவரங்கள் தொடர்பாக விசாரணையை நடத்தி வருகிறது.
நித்தியானந்தா ஆசிரமத்தின் பெயரில் 10 வங்கிகளில் ரூ. 35 கோடி பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் நித்தியானந்தா ஆசிரமத்தின் கடந்த 8 ஆண்டுகால வரவு செலவுகளையும் தணிக்கை குழு ஆராய்ந்து வருகிறது. இதில் நித்தியானந்தா உல்லாசமாக இருக்க மட்டும் ஒரு ஆண்டுக்கு பல கோடி ரூபாய் செலவழித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சி.டியில் இருப்பது நித்யானந்தா தான்-ஆய்வுக்கூடம்:
இதற்கிடையே நித்யானந்தாவிடம் விசாரணை நடத்தி வரும் பெங்களூர் சி.ஐ.டி. போலீசார் சமீபத்தில் பிடுதி ஆசிரமத்தில் இருந்து 36 வீடியோ காட்சிகளை பறிமுதல் செய்திருந்தனர்.
அதில் 5 பெண்களுடன் நித்யானந்தா செக்ஸ் லீலைகளில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. ஆனால், விசாரணையின்போது, ரஞ்சிதா மற்றும் இந்த சிடிக்களில் இருப்பது நான் இல்லை நித்யானந்தா கூறினார்.
இதையடுத்து இந்த சி.டிக்கள் ஹைதராபாத்தில் உள்ள தடயவியல் ஆய்வு கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
கடந்த 4 நாட்களாக அங்கு நடத்தப்பட்ட சோதனையின் அறிக்கை இன்று பெங்களூர் போலீசார் கைக்கு வந்து சேர்ந்தது.
அதில், 35 வீடியோ காட்சிகளிலும் இருப்பது நித்யானந்தா தான் என்று உறுதிப்படுத்தப்பட்டது. ரஞ்சிதாவுடன் இருப்பது போன்ற காட்சியில் தோன்றுவதும் நித்யானந்தா என்று ஆய்வகம் கூறப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’