வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 30 ஏப்ரல், 2010

மலையக மே தினத்தில் கூட்டங்களைத் தவிர்த்து நிகழ்வுகள்


மலையகத் தொழிற்சங்கங்கள் பல, இம்முறை மேதினக் கூட்டங்களைத் தவிர்த்து மேதின நிகழ்வுகளைத் தோட்டவாரியாக நடத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளன.
இலங்கைத்தொழிலாளர் காங்கிரஸின் மேதின ஊர்வலமும் கூட்டமும் அதன் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் தலவாக்கலை நகரில் இடம் பெறவுள்ளது.
இலங்கைத் தோட்டச் சேவையாளர் சங்கம் தனது மேதின ஊர்வலத்தினையும் கூட்டத்தினையும் கொட்டகலையில் நடத்தவுள்ளன.
இந்த நிலையில் தொழிலாளர் தேசிய சங்கம்,இலங்கைத்தொழிலாளர் ஐக்கிய முன்னணி, மலையக மக்கள் முன்னணி ஆகிய தொழிற்சங்கங்கள் இம்முறை மேதினக் கூட்டங்களையும் ஊர்வலங்களையும் நடத்தாமல் தோட்டவாரியாக மேதின நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, மலையகத்தின் அரச சார்பற்ற அமைப்புக்கள் சிலவும் மேதின நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளமை மேலும் குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’