வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 1 ஏப்ரல், 2010

ஐ.ம.சு.மு-ஐ.தே.மு ஆதரவாளர்களுக்கிடையே நாவலப்பிட்டியில் மோதல்


கண்டி மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிடுகின்ற ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் ,ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் லக்ஷமன் கிரியல்ல ஆகியோர் தமது ஆதரவாளர்களுடன் இன்று 1 ஆம் திகதி நாவலப்பிட்டி நகரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட போது ஆளுங்கட்சி ஆதரவாளர்களுக்கிடையில் கைக்கலப்புச்சம்பவம் ஒன்று ஏற்பட்டது.

இதன் போது இருவருக்குச் சிறுகாயம் ஏற்பட்டதோடு மனோகணேசனின் பிரசார ஊர்தியின் கட்டவுட்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
"இந்த நாட்டில் எந்தப்பகுதிக்கும் சென்று பிரசாரம் செய்யக்கூடிய ஜனநாயக உரிமையைத் தடுப்பதற்கு நாவலப்பிட்டி பிரதேசத்தைச்சேர்ந்த அரசியல்வாதி ஒருவரின் ஆதரவாளர்கள் முற்பட்ட போது எமது ஆதரவாளர்கள் துணிந்து செயற்பட்டதனால் கைக்கலப்பு ஏற்பட்டது" என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்தார்.
இதேவேளை தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள வந்தவர்கள் நகர மத்தியில் பட்டாசு கொளுத்தி ஆரவாரம் செய்த போது பொதுமக்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களாலேயே வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாகவும் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு எவ்விதமான இடையூறும் விளைவிக்கப்படவில்லை என்றும் ஸ்ரீலங்கா சுதந்திர தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவரும் நாவலப்பிட்டி நகரசபையின் முன்னாள் பிரதிதலைவருமான முரளிநாதன் தெரிவித்தார். ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர்களான லக்ஸ்மன் கிரியெல்ல, மனோ கணேசன், ஆகியோரின் தேர்தல் பிரசார ஊர்வலத்தை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேயின் ஆதரவாளர்கள் தடுத்து நிறுத்திய போது இம்மோதல் ஏற்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’