வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 20 ஏப்ரல், 2010

மண்டையன் குழுத் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன்

எந்தக் கொலையையும் கண்டிப்பதற்கு இவருக்குத் தகுதியிருக்கின்றதா? 
பாராளுமன்றப் பதவி இவருக்குப் புலிகள் போட்ட பிச்சை. அந்தப்
பிச்சையிலதான் இன்றும் இவர் பாராளுமன்றம் செல்லக்கூடியதாக இருக்
கின்றது. புலிகள் ஆயிரக்கணக்கில் கொலை செய்தபோதும் புலிகளின்; 
பாசறையைச் சுற்றியே வாலைத் தொங்கப் போட்டுக் கொண்டிருந்தவர்.


இந்தியப்படை காலத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தின் மண்டையன் குழுத் தலைவராக
இருந்த சுரேஸ் பிரேமச்சந்திரனதான்; முதன் முதலில் பிள்ளைபிடி வேலையை ஆரம்பித்
தவர். மண்டையன் குழுவிற்கும் பயந்து தங்கள் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை
தென்னிலங்கையெங்கும் கொண்டு சென்று ஒளித்தனர். முரசொலி திருச்செல்வத்தை
தேடிச்சென்ற சுரேஸ்; பிரேமச்சந்திரன் குழு திருச்செல்வத்தின் மகனான அகிலன் என்ற
சென்ற் ஜோன்ஸ் கல்லூரி மாணவனைச் சுட்டுககொன்றுவிட்டுச் சென்றது. யாழ் பத்
திரிசியார் கல்லூரியின் முன்னாள் ஆசிரியரும் யாழ் வின்சர் திரையரங்கு
முகாமையாளராகவுமிருந்த சுவாம்பிள்ளை ஆசிரியரை சுரேஸ் பிரேமச்சந்திரன் குழு கப்
பம் கேட்டுச் சுட்டுக்கொன்றது. இந்தச் சுவாம்பிள்ளை ஆசிரியர் ஆயர் கிங்ஸலி சுவாம்பிள்
ளையின் சகோதரராவர். யாழ் ஆசனக்கோவிலுக்குள் புலி உறுப்பினரைத் தேடிச்சென்ற
சுரேஸ் பிரேமச்சந்திரன் குழு அங்கு பியாணோ பழகிக் கொண்டிருந்த சந்திரா சக்
கரியாஸ் என்ற சிறுவனைப் பிடித்துச் சென்ற கொன்று துண்டு தண்டாக வெட்டி சாக்கிற்
குள் போட்டுக்கட்டி சுண்டிக்குளி மகளிர் பாடசாலைக்குப் பின்னால் வீசிவிட்டுச் சென்றது.
இப்படி மண்டையன் குழுத் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் குழு தலைமையில் செய்த
கொலைகளைப் பட்டியலிட்டு எழுதலாம்.

இது போல ஏனைய இயக்கங்களும் பல கொலைகளைச் செய்தன. அப்பாவிகள் போல
தீப்பொறியில் ஈ.பி.டி.பியைக் குற்றம் சாட்டி எழுதும் ஈ.என்.டி.எல்.எப் அமைப்பு மட்டும் உத்
தமர்களல்ல. இந்தியப்படை காலத்தில் கொலைகள். கொள்ளைகள், கப்பம் என்று பல
குற்றச்சாட்டுகள் ஈ.என்.டி.எல்.எப் அமைப்பிற்கும் உண்டு. இலங்கையில் மட்டுமல்ல இந்
தியாவிலும் கொலைகள் செய்ததாக ஈ.என்.டி.எல்.எப் முன்னாள் உறுப்பினர்கள் கூறுகிறார்
கள்.

இன்று கபில்நாத் கொலையைக் கண்டிக்கும் அனத்து இயக்கத்தினருக்கும் சொந்த இனத்
தவரைக் கொன்ற இரத்தக்கறை படிந்த வரலாறு உண்டு. வவுனியாவில் ஒரு டாக்டரைக்
கொன்றதற்காக ஒரு அமைப்பைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
வவுனியாவில் பல கொலைகள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் ஒரு பாடசாலை
அதிபர் உட்பட இருவர் கொல்லப்பட்டனர்.

இப்படிக் கொலைக் கலாச்சாரத்தின் காவலர்கள் இன்று தாங்கள் உத்தமர்கள் வேடம்
போட்டு கபில்நாத் கொலையில் அரசியல் லாபம் தேடுகிறார்கள்.  இந்தத் தேர்தல் காலத்
தில் இப்படி ஒரு மோசமான கொலையைச் செய்ய வேண்டிய தேவை ஈ.பி.டி.பியிற்கு எதற்
கு? ஜீவன் என்பவர் தங்கள் முகாமிற்கு வந்து செல்பவர் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
ஜீவன் போன்று பலரும் தங்கள் அலுவலத்திற்கு வந்து போகிறார்கள். அவர்கள் செய்யும்
செயலுக்கு ஈ.பி..டி.பி கட்சி பொறுப்பக முடியுமா? என்ற அவர்களின் கேள்வி
நியாயமானது. ஈ.பி.டி.பிதான் இந்தக் கொலையைச் செய்தது என்று பொலிஸாரே
கூறாதபோது சுரேஸ் பிரேமச்சந்திரன்  கூறுவதுதான் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’