வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 10 ஏப்ரல், 2010

ஐ,தே,க. தலைவர் பதவியில் இருந்து விலகப்போவதில்லை : ரணில்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்திலிருந்து தாம் பதவி விலகப்போவதில்லை என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தோ்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தோல்லியடைந்தமை குறித்து இன்று காலை இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் அக்கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி என்பது தேர்தல் தொகுதி அமைப்பு முறையில் உள்ள குறைபாடு ஒன்றே தவிர, தமது தலைமைத்துவத்தில் உள்ள நம்பிக்கை குறைவு அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.
மாத்தறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்யிட்டு கூடுதலான விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகியிருக்கும் மங்கள சமரவீரவும் அங்கு உரையாற்றினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’