-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்
;
செவ்வாய், 20 ஏப்ரல், 2010
யாழ் கோப்பாய் சரவணபவானந்தா மகாவித்தியாலய மாணவர்கள் அமைச்சர் அவர்களை சந்திப்பு.
ஏனைய மாவட்டங்களின் அபிவிருத்தி முன்னேற்றத்தை பார்க்கும் போது எமது மாகாணத்தின் அபிவிருத்தி பின்னடைவுகள் உங்களால் தெளிவாகக்கண்டு கொள்ள முடியுமென்றும் எமது பகுதிகளில் கடந்த காலங்களில் ஏற்பட்ட அழிவு யுத்தமே இதற்கு காரணமென்றும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.
இன்றைய தினம் யாழ். கோப்பாய் சரவணபவானந்தா மகாவித்தியாலய மாணவர்கள மற்றும் ஆசிரியர்களை அமைச்சர் அவர்கள் கொழும்பிலுள்ள அமைச்சர் அலுவலகத்தில் சந்தித்தபோதே அவர் மேற்கொண்டவாறு தெரிவித்தார்.
தென்பகுதிக்கான சுற்றுலாவை மேற்கொண்டு கொழும்பு வந்திருந்த மாணவர்கள் தங்களது சுற்றுலாவை முடித்துக்கொண்டு யாழ்.திரும்புவதற்கு முன்பதாக அமைச்சர் அவர்களை சந்தித்து கலந்துரையாடினார்கள்.
இதன்போது மேலும் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எதிர் காலத்தில் எமது மக்களையும் எமது பகுதிகளையும் மேம்படுத்தி நல்லதொரு வாழ்க்கையை எமது மக்கள் அநுபவிப்பதற்கு இம் மாணவர்கள் உரிய செயற்பாடுகளில் சரியான வழி நின்று இரங்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’