நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலின்போது எந்தவகையில் முடிவுகள் வெளியாகின என்பதில் எமக்கு சந்தேகம் இன்னமும் இருக்கிறது. அவ்வாறல்லாமல் நீதியான முறையில் வாக்குகள் எண்ணப்பட்டு வெளியிடப்பட வேண்டும் என வலியுறுத்துவதாக ஐக்கியத் தேசியக் கட்சி அறிவித்துள்ளது.
ஐக்கியத் தேசியக் கட்சியின் விசேட ஊடகவியலாளர் மாநாடு இன்று புதன்கிழமை அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அங்கு வருகை தந்திருந்த எதிர்க்கட்சிப் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய இக்கருத்தினை வெளியிட்டார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
"ஜனாதிபதித் தேர்தலின்போது இடம்பெற்ற சில சம்பவங்கள் எமக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தின. மாவட்ட தேர்தல் அத்தியட்சகரின் தேர்தல் முடிவுகளிலும் இறுதியாக அறிவிக்கப்பட்ட முடிவுகளிலும் வித்தியாசங்களைக் காணக்கூடியதாக இருந்தது.
இது தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளரிடம் நேற்று தெளிவுபடுத்தினோம். தேர்தலின்போது அரச சொத்துக்கள் பயன்படுத்தப்படுவது குறித்தும் வாக்கெடுப்பு நிலையங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டியதன் அவசியம் பற்றியும் கூறினோம். எமது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அவர் உறுதியளித்தார்.
மக்கள் ஆணை எதுவென்பதை வெளியுலகுக்குக் காட்ட வேண்டும். ஆதலால் நீதியானதும், நியாயமானதும், சுதந்திரமானதுமான தேர்தல் நடத்தப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும்" என்றார்.
-














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’