2009ஆம் ஆண்டின் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளதாகப் பரீட்சைத் திணைக்கள ஆணையாளர்நாயகம் அனுர எதிரிசிங்க அறிவித்துள்ளார். www.doenets.lk என்ற முகவரியுடன் தொடர்பு கொண்டு பரீட்சார்த்திகள் தமது பெறுபேறுகளை அறிந்து கொள்ள முடியும்.
கொழும்பு மற்றும் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர கல்வி வலயங்களைச் சேர்ந்த அதிபர்கள் நாளைக் காலை பெறுபேறுகள் அடங்கிய அட்டையை பரீட்சைத் திணைக்களத்துக்கு வந்து பெற்றுக் கொள்ளலாம்.
ஏனைய பகுதி பாடசாலைகளுக்கான பெறுபேறுகள் நாளை தபாலில் அனுப்பப்படும் எனவும் அனுர எதிரிசிங்க தெரிவித்தார். புதிய பாடத்திட்டத்தில் பரீட்சை எழுதிய 4 லட்சம் மாணவர்களின் பெறுபேறுகளே இன்று வெளியிடப்பட்டுள்ளன. பழைய பாடத்தின் படி பரீட்சை எழுதியோருக்கான பெறுபேறுகள் பண்டிகைக் காலத்தின் போது வெளியிடுவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
-















0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’