வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 8 ஏப்ரல், 2010

மற்றும் ஒரு அகதிகள் படகு அவுஸ்திரேலிய கடற்படையினரால் கைது

இலங்கை அகதிகளும் உள்ளடங்கியிருக்கலாம் என நம்பப்படும் 99 பேரைக்கொண்ட மற்றும் ஒரு சட்டவிரோத படகு ஒன்று, நேற்று அவுஸ்திரேலிய கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது கெவின் ரூட் பிரதமராக பதவியேற்றதன் பின்னர் அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசித்த 105 வது சட்டவிரோத படகு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கிறிஸ்மஸ் தீவில் 2040 அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில் இவர்களும் கிறிஸ்மஸ் தீவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
இந்த படகு கடந்த ஐந்து நாட்களுக்குள் அவுஸ்திரேலியாவுக்கு வந்த நான்காவது படகு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அவுஸ்திரேலியாவுக்குள் கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் பிரவேசித்த 856 இலங்கையர்களில் 113 பேருக்கு அவுஸ்திரேலியாவில் வதிவிட விசா வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’