வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 15 ஏப்ரல், 2010

ராக்கெட் சோதனை தோல்வி

உள்ளூரில் தயாரிக்கப்பட்ட இயந்திரத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்திய ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட சோதனை முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.

ஜி.எஸ்.எல்.வி டி 3 என்னும் இந்த செய்மதி தெளிவான வானத்தில் திட்டமிட்டபடி ஏவப்பட்டதுடன், அதன் முதல் இரண்டு படி நிலைகளுகளும் வழமைபோன்றே செயற்பட்டுள்ளன.
ஆனால், அதன் மூன்றாவது படிநிலையில் செயற்படத் தொடங்க வேண்டிய கிரயோஜெனிக் இயந்திரம் சரியாக செயற்படத் தவறி விட்டதால், செய்மதி பாதையை விட்டு விலகிச் சென்றது.
ராக்கெட் புறப்பட்டபோது கரகோஷம் செய்து மகிழ்ச்சி கொண்டாடிய விஞ்ஞானிகள், கலம் பாதை தவறிச் சென்றதால் கவலையில் மூழ்கினார்கள்.
என்ன தவறு நேர்ந்தது என்பது குறித்த முறையான விசாரணை ஒன்று நடத்தப்படும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவரான ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்த கிரயோஜெனிக் இயந்திரத்தை தயாரிப்பதில் கடந்த 15 வருட காலத்தை இந்திய விஞ்ஞானிகள் செலவிட்டிருந்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’