தபால்மூல வாக்களிப்பு முடிவுகள் தற்பொழுது வெளியாகி வருகிறது. இது வரை வெளிவந்த முடிவுகளின் படி
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசுக்கட்சி 2576வாக்குகளையும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 2254 வாக்குகளையும் ஐக்கிய தேசியக்கட்சி 671 வாக்குகளையும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி 318வாக்குகளையும் தமிழர் விடுதலைக்கூட்டணி 141 வாக்குகளையும் ஈழவர் ஜனநாயக்கட்சி 30 வாக்குகளையும் ஜனநாயக ஐக்கிய முன்னணி 17 வாக்குகளையும் பெற்றுள்ளது
யாழ் மாவட்டத்தில் 18.1 வீதமானவர்களே வாக்களித்திருக்கிறார்கள். 1இலட்சத்து 30 594 பேர் வாக்களித்திருக்கிறார்கள். இதுவரை எண்ணப்பட்ட நிலைகளின் படி தமிழரசுக்கட்சி முன்னணியிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இரண்டாவது இடத்திலும் இருப்பதாக நமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கும்புறுப்பிட்டியாவில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 28834 வாக்குகளையும் ஐக்கிய தேசியக்கட்சி 10277 வாக்குகளையும் ஸ்ரீலங்கா தேசிய முன்னணி 2257 வாக்குகளையும் பெற்றுள்ளன.
மாத்தறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 10560 வாக்குகளையும் ஐக்கிய தேசியக்கட்சி 3041 வாக்குகளையும் மாத்தளை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 9893 வாக்குகளையும் ஐக்கிய தேசியக்கட்சி 2854 வாக்குகளையும் பெற்றுள்ளன.
இரத்தினபுரி மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 11215 வாக்குகளையும் ஐக்கிய தேசியக்கட்சி 3010 வாக்குகளையும் பெற்றுள்ளன
முதலாவது தொகுதி ரீதியான முடிவும் வெளிவந்துள்ளது. தெவிதுவர தொகுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 26117 வாக்குகளையும் ஐக்கிய தேசியக்கட்சி 9535 வாக்குகளையும் பெற்றுள்ளன.
-














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’