வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 21 ஏப்ரல், 2010

கொடுமைமிகு அவசரகால சட்டத்தை நீக்க வேண்டும் -சர்வதேச மன்னிப்புச்சபை!

யுத்தம் முடிவுற்ற பின்னர் தெரிவுசெய்யப்பட்டுள்ள நாடாளுமன்றம் இலங்கையில் பலவருட காலங்களாக நடைமுறையில் உள்ள கொடுமை மிகுந்த அவசரகாலச் சட்டத்தை நீக்க வேண்டும் என் சர்வதேச மன்னிப்புச்சபை கோரிக்கை விடுத்துள்ளது.
அவசரகாலச் சட்டத்தின் கீழேயே அந்நாட்டில் பரவலாக மனித உரிமைகள் மீறப்பட்டும், நசுக்கப்பட்டும் வந்துள்ளன. போர் முடிவுற்ற பின்னரான முதலாவது நாடாளுமன்றம் நாளை 22ம் திகதி கூடவுள்ள வேளையில் சர்வதேச மன்னிப்புச்சபை இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது. 1971ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக, இடைவிடாது நடைமுறையில் இருக்கும் பயங்கரவாதத் தடைச்சட்டம், அவசரகாலச்சட்டம் மற்றும் அவசரகால விதிகள் என்பனவற்றைக் களைந்து மனித உரிமைகளைப் பேணும் சட்டங்களைப் புதிய அரசு உருவாக்க வேண்டும் என்று நேற்று சர்வதேச மன்னிப்புச்சபையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனிடையே நீண்ட பல வருடங்களாக இலங்கையில் நடைமுறையில் உள்ள மேற்படி அவசரகாலச் சட்டம் மக்களை நீண்டகாலம் தடுத்துவைக்கவும், இரகசிய சிறைச்சாலைகளை உருவாக்கவும் வழிசெய்துள்ளது. அவை மட்டுமன்றி காணாமற் போதல், சித்திரவதை செய்தல், காவலில் வைப்பட்டவேளை மரணங்கள் நேர்தல் போன்ற சர்வதேச மனிதஉரிமைச் சட்டங்களுக்கு முரணான சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. கடந்த 30வருடங்களில் ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் நீதி விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இந்த கொடிய சட்டங்களை அரசாங்கம் ஊடகவியலாளர்களையும், அரசியல் எதிரிகளையும், தொழிற்சங்கங்களையும் அடக்கி ஒடுக்கப்பயன்படுத்தி வருகின்றது. இலங்கை முன்னேறிச் செல்ல வேண்டுமானால் மக்களின் மனித உரிமைகளை மலினப்படுத்தி அவற்றை மீறி தட்டிப்பறிக்கும் இச்சட்டங்களை முற்றாகக்களைந்து. மனிதஉரிமை மீறல்களை ஊக்குவிக்கும் சட்டவிதிகளை நீக்கவேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசியபசிபிக் பிராந்திய உதவி இயக்குநர் மல்கோத்ரா நேற்றுத் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’