வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 21 ஏப்ரல், 2010

நாளை நாடாளுமன்றம் கூடும்! ஜனாதிபதியின் உரை மே 4 ம் திகதி! சபாநாயகராக ஜோன் செனிவிரத்ன?

நாளை நாடாளுமன்றம் கூடினாலும், அடுத்த மாதம் 4ம் திகதி புதிய நாடாளுமன்றம் மீண்டும் கூடும்போதே அங்கு ஜனாதிபதி பிரசன்னமாகி உரையாற்றுவார் என்று நாடாளுமன்றச் செயற்குழு தெரிவித்துள்ளது.

நாளைய நாடாளுமன்ற அமர்வில் ஜனாதிபதி உரை நிகழ்த்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட போதிலும் சில காரணங்களுக்காக அது ஒத்திப்போடப்பட்டுள்ளது எனத் தெரியவருகிறது.
நாளைய நாடாளுமன்ற அமர்வில் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் சத்தியப் பிரமாணம் மற்றும் சபாநாயகர், பிரதி சபாநாயகர், குழுக்களின் பிரதித் தலைவர் ஆகியோரின் தெரிவு போன்றவை மாத்திரமே இடம்பெறும்.
நாளை காலை 8.45க்கு நாடாளுமன்றம் கூடுகின்றது. முதலில் சபாநாயகர் தெரிவு இடம்பெறும். அதனைத் தொடர்ந்து எம்.பிக்கள் அனைவரும் தெரிவு செய்யப்பட்ட சபாநாயகரின் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்வர்.
இறுதி நிகழ்வாக பிரதி சபாநாயகர் தெரிவும் குழுக்களின் பிரதித் தலைவர் தெரிவும் இடம்பெறும்.
அதனைத் தொடர்ந்து சபை அடுத்த மாதம் 4ஆம் திகதிவரை சபாநாயகரால் ஒத்திவைக்கப்படும்.
நான்காம் திகதி மீண்டும் சபை கூடும்போதே அன்றைய தினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றில் உரைநிகழ்த்துவார் என்று நாடாளுமன்ற செயற்குழு தெரிவிக்கின்றது.
இதேசமயம், ஆளும் தரப்பின் சிரேஷ்ட உறுப்பினரான ஜோன் செனிவிரத்ன புதிய சபாநாயகராகத் தெரிவு செய்யப்படலாம் என அரசுத் தலைமையுடன் தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்தன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’