வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 29 ஏப்ரல், 2010

சர்வதேச அழுத்தத்தை இல்லாதொழிப்பதே எங்கள் நோக்கம் -கருணாஅம்மான் தெரிவிப்பு

புதிய அமைச்சரவையில் மீள்குடியேற்ற பிரதி அமைச்சராக பதவி பெற்றுள்ள கருணா இடம்பெயர்ந்துள்ள அனைத்து மக்களையும் மீள்குடியமர்த்துவதுடன் அவர்களது அடிப்படை வசதிகள் மற்றும் வாழ்வாதார உதவிகள் அனைத்தையும் தாம் வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார் 
அகதி முகாம்களில் தற்போது சுமார் 60000 பேர்வரையில் உள்ளனர் இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்தமண்ணில் சுதந்திரமாக வாழும் நிலையை உருவாக்குவதுடன் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியமர்த்தும் விடயம் தொடர்பில் இலங்கை அரசுக்கு உள்ள சர்வதேச அழுத்தங்களை இல்லாதொழிப்பதே தனது நோக்கம் எனவும் தெரிவித்துள்ளார். தமக்கு மீள்குடியேற்ற பிரதியமைச்சர் பதவியை கொடுத்துள்ள ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் எஞ்சியுள்ள இடம்பெயர்ந்துள்ள மக்களை மீள்குடியமர்த்தம் நடவடிக்கை துரிதமாக முன்னெடுக்கப்படும் என்றும் நேற்று கொள்ளுப்பிட்டியிலுள்ள அமைச்சு அலுவலகத்தில் அமைச்சுப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட போது கருணா மேற்படி தெரிவித்துள்ளார். இவரது அலுவலகம் கொள்ளப்பிட்டியிலுள்ள அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு கட்டடத்தில் நாளை முதல் இயங்கவுள்ளது. இதேவேளை மீள்குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்ணான்டோவின் அமைச்சு அலுவலகம் கொள்ளுப்பிட்டி அலரிமாளிகைக்கு முன்னாலுள்ள மீள்குடியேற்ற அமைச்சு கட்டடத்தில் இயங்கவுள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’