வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 25 ஏப்ரல், 2010

எமது கருத்துக்கள் மக்களை சென்றடைவதற்கான ஊடகச் சூழல் இருக்கவில்லை: கஜேந்திரகுமார்

நாம் இத்தேர்தலில் பலத்த சவால்களைச் சந்தித்தோம். எமது கருத்துகள் மக்களைச் சென்றடைவதற்கான ஊடக சூழல் யாழ். மற்றும் திருமலை மாவட்டங்களில் இருக்கவில்லை. தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி வேட்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
பொதுத்தோ்தலில் தோல்வியடைந்தமை தொடர்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதனை மீறி மக்களை நேரிடையாகச் சென்றடைவதற்கான கால அவகாசமோ, வளங்களோ எமக்குக் கிடைக்கவில்லை. அத்துடன், சில பகுதிகளுக்குச் சென்று நாங்கள் கருத்துகளைக் கூறுவதற்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டன.

எனினும், நாங்கள் தேசம் என்பது தொடர்பான சிந்தனைகளையும், இலங்கைத் தீவின் அரசு, சிங்கள தமிழ்த் தேசங்களின் கூட்டாக இருக்கும் வகைகள் பற்றிய எண்ண ஓட்டங்களையும் இயன்றளவு மாணவர்கள், கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள் மற்றும் தேசியப்பற்றுக் கொண்ட செயற்பாட்டாளர்கள் முன்பாக வைத்துள்ளோம். மேலும், புதிய இளம் வீச்சுக்கொண்ட ஆர்வலர்களையும் நாங்கள் இந்தத் தேர்தல் மேடைகளைப் பயன்படுத்தி மக்கள் முன்பாக அறிமுகம் செய்துள்ளோம்.

நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரானவர்கள் அல்ல.

150,000 ற்கும் அதிகமான மக்களும் 40,000 ற்கும் அதிகமான இளைஞர்களும் உயிர்த்தியாகம் செய்து வலிமை பெற்றுள்ள தமிழ்த் தேசியக் கொள்கை நிலைப்பாட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேர்மையாக முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென நாம் விரும்புகின்றோம்.

அவ்வாறான ஓர் சூழ்நிலை ஏற்படும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் இணைந்து செயற்படுவதற்கு நாம் தயாராக உள்ளோம்.

அத்துடன்,“தனித்துவமான இறைமை கொண்ட தமிழ்த் தேசம்' என்ற நிலைப்பாட்டை உறுதியாக முன்னெடுத்துச் செல்லும் சகல தரப்புகளுடனும் எதிர்காலத்தில் இணைந்து செயற்பட நாம் தயாராகவே உள்ளோம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’