திருகோணமலை மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் சுதந்திரமானதும் நியாயமான முறையில் நடத்தப்பட்டது என்றும் கூறமுடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முதன்மை வேட்பாளருமான இரா.சம்பந்தன் வாக்களிப்பு முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சம்பந்தன் மேலும் சொன்னதாவது:
“இன்று வியாழன் காலை 9 மணிக்கு தகவல் கிடைத்து திருகோணமலைக்கு வடக்கே உள்ள குச்சவெளி கிராமத்திற்கு சென்றேன். அங்கே ஆளும் கட்சி வேட்பாளராக போட்டியிடும் அமைச்சர் ஒருவரின் குண்டர்கள் துப்பாக்கிகளுடன் தமிழ் வாக்காளர்கள் வாக்களிக்கச் செல்ல முடியாதபடி தடுப்பதாக தகவல் கிடைத்தது.
வாக்காளர்கள் பலர் வாகனம் ஒன்றில் வாக்களிப்பு நிலையம் ஒன்றுக்குச் சென்று கொண்டிருந்தனர். இக்குண்டர்கள் இவ்வாகனத்தை மறித்து அவர்களிடம் இருந்து அவர்களின் தேசிய அடையாள அட்டைகளைப் பறித்து கொண்டு அவர்களை வாக்களிக்கச் செல்ல அனுமதிக்கவில்லை.
இதனை அங்கு இருந்த பொலிஸ் அதிகாரியின் கவனத்திற்கு கொண்டு வந்தேன். அவர் தலையிட்டு அத்தமிழ் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு உதவி செய்தார்.
அந்த அமைச்சரின் குண்டர்கள் சல்லி மற்றும் சாம்பல்தீவு ஆகிய கிராமங்களிலும் நிறுத்தப்பட்டடிருந்தனர். அவர்கள் பயன்படுத்திய வாகனங்களில் ஜனாதிபதியின் படம் ஒட்டபப்ட்டிருந்தது. சலப்பையாற்று பிரதேசத்திலும் இக்குண்டர்கள் அட்டகாசம் செய்தனர். தம்பலகமம் கிராமத்திலும் அமைச்சரின் குண்டர்கள் தமிழ் மக்கள் வாக்களிப்பதை தடுத்துள்ளனர். இந்த குண்டர்கள் தமிழ் வாக்காளர்களின் வாக்களிப்பு வீதத்தைக் குறைப்பதற்கு அமைச்சரால் பயன்படுத்தப்பட்டடிருந்தனர்.
“ திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் வாக்களார்கள் வாக்களித்த வீதம் நாம் எதிர்பார்த்தபடி அமையவில்லை.”- இவ்வாறு சம்பந்தன் தெரிவித்தார்.
மாலை நான்கு மணிக்கு குச்சவெளியிலிருந்து திருகோணமலை நகருக்கு திரும்பினார்.
-














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’