வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 29 ஏப்ரல், 2010

சிக்கினார் ரஞ்சிதா!!

நடிகை ரஞ்சிதா இருக்கும் இடத்தை கர்நாடக போலீசாரிடம் நித்யானந்தா தெரிவித்தார்
மேலும் ரஞ்சிதாவின் புதிய தொலைபேசி எண்களையும் கொடுத்தார். இதையடுத்து ரஞ்சிதாவிடம் பேசிய கர்நாடக சிஐடி போலீசார், அவரை உடனே விசாரணை க்கு ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளனர்.
இதையடுத்து இரண்டொரு நாளில் நேரில் ஆஜராவதாக ரஞ்சிதா ஒப்புக் கொண்டுள்ளார்.

முன்னதாக இமாச்சலப் பிரதேசத்தில் 45 நாட்களாகப் பதுங்கியிருந்தபோது ரஞ்சிதாவுடன் நித்யானந்தா 174 முறை தொலைபேசி மூலம் பேசியுள்ளதாக கர்நாடக போலீசார் தெரிவித்தனர். ஆனால், அந்த எண்களை போலீசார் தொடர்பு கொண்டபோது அவரை சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தன.
இந நிலையில் ரஞ்சிதாவின் வேறு ஒரு தொலைபேசி எண்ணை போலீசாரிடம் நித்யானந்தா தந்தார். அதன்மூலம் ரஞ்சிதாவிடம் போலீசார் பேசி விசாரணைக்காக பெங்களூர் சிஐடி அலுவலகத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டனர்.
அதேசமயம், அவர் தப்பி விடாமல் தடுப்ப்பதற்காக அவர் மறைந்துள்ள இடத்திற்கு போலீஸ் தனிப்படையும் விரைந்துள்ளதாகக் கூறப்படுகிறது

சென்னை உயர் நீதிமன்றத்தில் நித்யானந்தா ஜாமீன் மனு:
இந் நிலையில் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நித்யானந்தா மனு தாக்கல் செய்துள்ளார்.
கர்நாடக சிஐடி போலீசாரால் இமாச்சல் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார் நித்யானந்தா. அவர் மீது தமிழகத்தில் காவல் நிலையங்களில் பதிவான வழக்குகள் அனைத்தும் கர்நாடக போலீசாருக்கு மாற்றப்பட்டுவிட்டாலும் அவரிடம் தமிழக போலீஸ் படையும் விசாரணை நடத்தவுள்ளது.
ஆனால், நித்யானந்தா மீது சென்னை, கோவை, புதுவை மத்திய குற்றப் பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் கைதாகாமல் தப்ப சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார் நித்யானந்தா.
அதில், கர்நாடகா போலீசாரால் கைது செய்யப்பட்டு அங்கு விசாரணை நடைபெற்று வருகிறது. அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறேன். இந்த நிலையில் தமிழக போலீசார் என்னை கைது செய்ய முயற்சி செய்வதாக அறிகிறேன். எனவே எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று அவர் தனது மனுவில் கூறியுள்ளார்.

ஐசிஐசிஐ வங்கி கணக்கு முடக்கம்-எதிர்த்து வழக்கு:
இந் நிலையில் நித்யானந்தா ஆசிரமத்தின் திருவண்ணாமலை கிளையின் ஐசிஐசிஐ வங்கிக் கணக்கை தமிழக காவல் துறை முடக்கியதை எதிர்த்து நித்யானந்தாவின் சீடர் சதானந்தா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம் ஒரு வாரத்தில் பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

புகார் கொடுக்கலாம்-கர்நாடக சிஐடி போலீசார்:
இந் நிலையில் நித்யானந்தாவால் பாதிக்கப்பட்டவர்கள் அச்சமின்றி புகார் கொடுக்க முன் வரலாம் என்று கர்நாடக சிஐடி போலீசார் கூறியுள்ளனர்.

சிஐடி எஸ்.பி.யோகப்பா செய்தியாளர்களிடம் பேசுகையில்,
நித்யானந்தாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இதுவரை எந்தவிதமான உபயோகமான தகவலும் கிடைக்கவில்லை. இதனால் அவரது காவலை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க அனுமதி கேட்க உள்ளோம்.
நித்யானந்தாவால் பாதிக்கப்பட்டவர்கள் அச்சமின்றி முன்வந்து புகார் கொடுக்கலாம். புகார் கொடுப்பவர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றார்.
இந் நிலையில் இன்று மாலையுடன் அவரது போலீஸ் காவல் முடிகிறது. எனவே அவரை இன்று இரவுக்கு நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தவுள்ளனர்.
அவரிடம் விசாரணை இன்னும் முழுமையாக முடியாததால் மேலும் 1 வாரம் காவலில் எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
போலீஸ் காவலுக்கு நீதிமன்றம் அனுமதிக்காவிட்டால் இன்று இரவே அவர் சிறையில் அடைக்கப்படுவார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’