பயங்கரவாதத்தை முற்றாகத் தோற்கடிப்பதில் இலங்கையும் இந்தியாவும் நல்ல புரிந்துணர்வுடன் பரஸ்பர ஒத்துழைப்புடன் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்திருக்கிறார்.
பூட்டானில் நேற்று நடைபெற்ற "சார்க்'வெளிவிவகார அமைச்சர்களின் கூட்டத்தில் பேசும்போது இத னைத் தெரிவித்த அவர், இரு நாடுகளும் முன்னெடுக்கும் இந்தப் பயங்கரவாத எதிர்ப்பு நட வடிக்கையில் "சார்க்' அமைப்பிலுள்ள ஏனைய நாடுகளும் ஒன்றிணைய வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:நாகரிக சமூகமொன்றின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்குப் பயங்கரவாதம் கடும் அச்சுறுத்தலாகவுள்ளது.
தென்னாசிய பிராந்தியம் அதிகளவிற்கு இதனால் பாதிக்கப்பட்டுள்ளது.
எமது சமூகத்தைப் பிளவுபடுத்தி பலவீனப்படுத்த முயலும் பயங்கரவாத சக்திகளுக்கு எதிராக அணிதிரள வேண்டிய காலம் வந்துள்ளது.
கடந்த உச்சிமாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட குற்ற விவகாரங்களில் பரஸ்பர உதவி தொடர்பான பிரகடனத்தை அங்கீகரிப்பதன் மூலம் பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதற்கான எமது போராட்டத்தில் இணையுமாறு எனது சக தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.
சர்வதேச பயங்கரவாதம் தொடர்பான ஐ.நாவின் உத்தேச பிரகடனத்தை விரைவில் பூர்த்தியாக்கவேண்டும்.
இந்தியாவும், இலங்கையும் "சார்க் பயங்கரவாதிகள் குற்றக்கண்காணிப்புப் பிரிவைப்' பலப்படுத்தி இரு நாடுகளின் படையினர் மத்தியில் தகவல்களைப் பரிமாறுவதில் ஈடுபட்டுள்ளன பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதில் இரு நாடுகளும் கூட்டாக முயன்று வருகின்றன. இதில் ஏனைய நாடுகளும் இணையவேண்டும். எனக் கேட்டுக்கொண்டார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’