வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 30 ஏப்ரல், 2010

ஊடகத்துறைக்கு எதிராக பிழை செய்திருந்தால் பதவி விலகுவேன்- மேர்வின் சில்வா

ஊடகத்துறைக்கு எதிராக பிழை செய்திருந்து அது நிருபிக்கப்பட்டால் தான் அமைச்சு பதவியில் இருந்து விலகுவேன் என பிரதியமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலின் பின் மேர்வின் சில்வா ஊடகத்துறையின் பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து பல ஊடக நிறுவனங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தன.
இந்நிலையில் இன்று கிருலப்பனையிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் மேர்வின் சில்வா ஊடகத்துறை பிரதியமைச்சருக்கான பொறுப்புகளை ஏற்றுக்கொண்டதன் பின்னர் ஊடகவியாளர் மத்தியில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’