வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 27 ஏப்ரல், 2010

ஐ.தே.மு - ஜ.ம.மு சந்தித்துப் பேச்சு - இறுதித் தீர்வுகள் எட்டப்படவில்லை. _

ஜனநாயக மக்கள் முன்னணியின் சார்பில் தேசிய பட்டியல் நியமனம் வழங்கப்படுவது தொடர்பில் அக்கட்சிக்கும் ஐக்கிய தேசிய கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கும் இடையில் இன்று மாலை நடைபெற்ற விசேட சந்திப்பு இறுதி முடிவுகள் எதுவும் எட்டப்படாத நிலையில் முடிவடைந்துள்ளது.

தேசியப்பட்டியல் நியமனம் விவகாரத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் தவறான முடிவினை எடுத்துள்ளதாகக் கூறி ஜனநாயக மக்கள் முன்னணி தனித்து இயங்கப் போவதாக அறிவித்தது.
இந்நிலையில் இந்தப் பிரச்சினைக்கு முடிவுகள் எட்டப்படுவதற்காக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் ஆகியோர் இன்று சந்தித்துப் பேசியுள்ளனர்.
எனினும் இறுதி முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் மற்றும் மங்கள் சமரவீர ஆகியோர் தாம் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனை தனிப்பட்ட ரீதியில் சந்தித்துக் கலந்துரையாட வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்தனர்.
இத் தகவலை நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன வீரகேசரி இணையத்தளத்துக்கு உறுதிப்படுத்தினார்.
கூட்டத்தின் பின்னர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனை அவரது வீட்டில் வைத்து அவர்கள் சந்தித்துப் பேசியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பிலான இறுதித் தீர்மானம் நாளை எடுக்கப்படவுள்ளதாக கட்சிகளின் உள்ளக தகவல்கள் எமக்குத் தெரிவித்தன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’