ஐக்கிய நாடுகளின் அரசியல் விவகார பிரதிநிதியான லின் பஸ்கோ அடுத்தமாத நடுப்பகுதியளவில் இலங்கை வரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் எதிகால அபிவிருத்தி பணிகள் போன்றவை தொடர்பாக ஆராயும் பொருட்டே அவர் இலங்கை வரவுள்ளார்.
இதற்கான அனுமதி கோரிக்கை ஒன்றும் இலங்கை அரசாங்கத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
லின் பொஸ்கோ முன்னரும் இலங்கை வருகை தந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கை தொடர்பாக, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பாக் கீ மூனுக்கு ஆலோசனை வழங்க குழு ஒன்றை நியமிப்பது தொடர்பில் அவர் இலங்கையில் பேச்சு நடத்துவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது
எனினும் பான் கீ மூனின் இந்த யோசனையை இலங்கை ஏற்கனவே நிராகரித்துள்ளது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’