வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 28 ஏப்ரல், 2010

யாழ். தினக்குரல் உதவி ஆசிரியர் செல்வரட்ணம் ரூபனின் இறுதிக்கிரியைகள்



இளம் பத்திரிகையாளரும் யாழ். தினக்குரல் பதிப்புக்கான உதவி ஆசிரியரும் வட்டுக்கோட்டை தபால் திணைக்கள பகுதி நேர ஊழியருமான 32 வயதான அமரர் செல்வரட்ணம் ரூபன் அவர்களின் இறுதி நிகழ்வில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்த்திரி அலன்ரின் உதயன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் கமலேந்திரன் (கமல்) ஆகியோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.



அன்னாரது வீட்டுக்கு நேரடியாக சென்ற இவர்கள் அவரது இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு தமது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்ததுடன் அவர்களின் துயரில் தாமும் பங்கெடுத்துக் கொண்டதுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் சார்பில் மலர் அஞ்சலி செலுத்தி அவரது இரங்கலையும் தெரிவித்தனர்.

மேலும் அங்கு இரங்கல் உரை நிகழ்த்திய கமலேந்திரன் (கமல்) அவர்கள் மிகவும் இளம் வயதில் தானும் மக்களுக்கு ஏதோ ஒரு வழியில் சேவை செய்யவேண்டும் என்ற நோக்கம் காரணமாக அமரர் ரூபன் பத்திரிகைத் துறையில் இணைந்து கொண்டு நெருக்கடியான காலங்களில்கூட தனது பணியை இடைவிடாது தொடர்ந்தது மட்டுமல்லாது தான் ஒரு உதவி ஆசிரியர் என்று பாராமல் பத்திரிகை விநியோகத்திலும் நேரடியாக ஈடுபட்டுள்ளதுடன் சக்திதாசன் என்ற பெயரில் ஆக்கங்களையும் படைத்துள்ளார். இவ்வாறான ஒரு சிறந்த இளம் பத்திரிகையாளனை கொடிய நோய் காவு கொண்டது. இவரது இழப்பு பல பிரதேசங்களில் இருக்கும் பல ஆயிரம் வாசகர் நெஞ்சங்களையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது என்றும் மேலும் தெரிவித்தார்.

அன்னாரது பூதவுடல் இன்று பிற்பகல் வட்டுக்கோட்டை அராலி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’