
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளரான மட்டக்களப்பை சேர்ந்த ரமணன் என்பவர் கடந்த இரவு அவரது வீட்டிற்கு அருகில் வைத்து கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். முகமூடி அணிந்த சிலர் இத்தாக்குதலை நடத்தியதாக தாக்குதலுக்குள்ளான ரமணன் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளரான சட்டத்தரணி சிவநாதனுடன் சென்று தேர்தல் பரப்புரையை முடித்துவிட்டு வீடு திரும்பியவேளை இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இவர் தமிழரசுக் கட்சியின் ஆரம்பகால உறுப்பினரும், சிறந்த மேடை பேச்சாளரும் ஆவார். கடந்த பல தினங்களாக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவாக கிராமங்கள் தோறும் பேசி தனது உணர்ச்சி வசமான பேச்சின் காரணமாக அனேகமான தழிழ் உணர்வாளர்களின் அமோக ஆதரவினை பெற்று வருவதோடு தமிழ் தேசிய கூட்டமைப்பின் மக்கள் ஆதரவை அதிகரித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’