மேற்கு நாடுகளிலிருந்து வரும் அழுத் தங்களுக்கு எதிராக தெற்காசிய நாடுகள் கடுமையான முறையில் போராட வேண் டும் என்று ஜனாதிபதி மஹிந்த தெரிவித்தார்.
மேற்குலக நாடுகளின் தீர்வுத் திட்டங் கள் பலவந்தமாகத் திணிக்கப்படுவதை சார்க் நாடுகள் ஏற்றுக்கொள்ளக் கூடாது என் றும் அவர் கூறினார்.
பூட்டானின் தலைநகர் திம்புவில் நேற்று நடைபெற்ற 16 ஆவது சார்க் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இவற்றைத் தெரிவித்தார்.மேலும் அவர் கூறியவை வருமாறு
தெற்காசிய வலய நாடுகள் வெளிச் சக்தி களின் அழுத்தங்களுக்கு அடிபணியாது, ஸ்திரமான கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும். தெற்காசிய வலய நாடுகள் பல்வேறு சாதனைகளைப் புரிந்துள்ள போதிலும், சில வேளையில் பிராந்தியத்தின் பலம் குறைத்து மதிப்பீடு செய்யப்படுகிறது. பிராந்திய வலய நாடுகளுக்கு இடையிலான கூட்டுறவு பல்வேறு வெற்றிகளுக்கு வழிகோலும்.
பிராந்தியத்திற்கு வெளியேயான சக்திகளுடன் உறவுகளைப் பேணுவதில் காட்டும் முனைப்பு, பிராந்திய நாடுகளுக்கு இடையில் காட்டப்படுவதில்லை.
தெற்காசிய வலய நாடுகளுக்கு இடையிலான பிணைப்பை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தேவை ஏற்படின் தற்போதைய கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடத் தயங்கக் கூடாது.
உலக விவகாரங்களில் தெற்காசிய வலய நாடுகளின் கூட்டுறவு மிகவும் அவசியமானது. சர்வதேச அரங்களில் தெற்காசிய வலய நாடுகளின் குரல் ஒருமித்த தொனியில் ஒலிக்க வேண்டும். அந்த இலக்கை நோக்கியே எமது நடவடிக்கைகள் நகர வேண்டும்.
குறிப்பாக ஐக்கிய நாடுகளின் விவகாரங்களில் பிராந்திய நாடுகளுக்கு இடையில் அதிக பிணைப்பு அவசியம். உலகின் ஏனைய வலய நாடுகளுக்கு இடையில் காணப்படும் சில வலுவான அமைப்புகளை முன்மாதிரியாகக் கொண்டு நாமும் செயற்பட வேண்டும் என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’