வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 7 ஏப்ரல், 2010

குருநகர் கிறீன் கிங்ஸ் விளையாட்டுக் கழகத்தின் 47வது ஆண்டு நிறைவு விழாவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.

குருநகர் கிறீன் கிங்ஸ் விளையாட்டுக் கழகத்தின் 47வது ஆண்டு நிறைவு விழாவில் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீர வீராங்கனைகளுக்கு வெற்றிக் கேடயங்களையும் பரிசில்களையும் வழங்கிக் கௌரவித்தார்.


குருநகர் கிறீன் கிங்ஸ் கலையரங்கில பரிசளிப்பு நிகழ்வுகள் நேற்றைய தினம் (05) நடைபெற்றன. ஏற்கனவே நடைபெற்று முடிந்த கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்ட டைமன் கிங்ஸ் அணிக்கும் இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்ட நண்பர்கள் அணிக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வெற்றிக் கேடயங்களை வழங்கினார்.

தொடர்ந்து சைக்கிள் ஓட்டம், உடையலங்காரம் மரதன் ஓட்டம் சங்கீதக் கதிரை ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கும் அமைச்சர் அவர்கள் வெற்றிக் கேடயங்களையும் பரிசில்களையும் வழங்கினார்.

கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் முதலிடத்தைப் பெற்றுக் கொண்ட டைமன் கிங்ஸ் அணிக்கு 10000 ரூபாவையும் நண்பர்கள் அணிக்கு 8000 ரூபாவையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வழங்கி தனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்.






0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’