அவுஸ்ரேலிய அருகேயுள்ள கடற்பரப்பில், பயணித்துக்கொண்டிருந்த படகு ஒன்றை அந்த நாட்டு கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
41 பேரை கொண்ட குறித்த படகில் இருந்தவர்கள் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மேற்கு அஸ்திரேலிய கடற்கரை அருகில் உள்ள ஆஷ்மோர் தீவு அருகில் 41 பேருடன் இந்த படகு பயணித்துக்கொண்டிருந்தது.
இதனை அவதானித்த அவுஸ்திரேலிய கடற்படையினர் அந்த படகை இடைமறித்து விசாரணைக்காக அருகிலுள்ள கிறிஸ்துமஸ் தீவுக்கு அழைத்துச் சென்றுள்ளனார்.
இது தொடர்பாக, அவுஸ்ரேலிய உள்துறை அமைச்சர் பிராண்டோ ஓ கொன்னார் கருத்து தெரிவிக்கையில் குறித்த படகில் உள்ளவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவில்லை.
எனினும், அனேகமாக இவர்கள் இலங்கையர்களாகவோ அல்லது ஆப்ரிக்கனிஸ்தானை சேர்ந்தவர்களாகவோ இருக்கக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், புகலிடம் கோரும் அவர்களின் கோரிக்கையை இன்னும் ஆறு மாத காலத்துக்குப் பரிசீலிக்க முடியாது என பிராண்டோ ஓ கொன்னார் குறிப்பிட்டார்.
அவுஸ்ரேலிய அரசாங்கம் இந்த மாதம் 9 ஆம் திகதி முதல் இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மூன்று மாதங்களும், ஆப்ரிக்கர்களுக்கு ஆறு மாதங்களும் புகலிடம் கோரி வருவதைத் தடைசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’