வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 13 ஏப்ரல், 2010

மராக் துறைமுக கப்பலில் இருந்து 30 இலங்கையர்கள் தப்பி ஓட்டம்


இந்தோனேசியாவின் மராக் துறைமுகத்தில் கப்பலில் இருந்த இலங்கை அகதிகளில் 30க்கும் அதிகமானவர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கை மற்றும் இந்தோனேசிய அகதிகள் தொடர்பிலான தமது கொள்கையை மாற்றிக் கொண்டதை அடுத்தே அவர்கள் தப்பி சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தகவலை அந்த படகில் உள்ள இலங்கை அகதிகளின் பேச்சாளராக செயல்படுகின்ற நிமல் என்பவர் வெளியிட்டுள்ளார்.
அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் கொள்கை மாற்றத்தை அடுத்து, படகில் இருந்த மக்கள் அச்சமுற்று அங்கிருந்து தப்பி சென்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒக்டோபர் மாதம் வந்த தாங்கள் இதுவரையில் தீர்வு வழங்கப்படாமல் இருக்கின்றோம். இந்த நிலையில், அவுஸ்திரேலிய பிரதமரின் அறிவிப்பு எங்களுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனினும் புதிய அரசியல் தஞ்சம் கோரிகளுக்கு அந்த அறிவிப்பு செல்லுபடியாகும் எனவும் எங்கள் தொடர்பில் கரிசணை உண்டு என தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் மல்லிகா கணேந்திரன் என்ற பெண் தமது 3 பிள்ளைகளுடன் படகில் இருந்து இறங்கி , தனியான கூடாரம் ஒன்றுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை தற்போது எமது சிறுவர்களை தண்டிக்கும் நாடாக உள்ளது. எனவே இலங்கையில் இருந்து எமது பிள்ளைகளின் எதிர்காலத்துக்காகவே தாங்கள் அவுஸ்திரேலிய செல்வதாக மல்லிகா தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’