வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 7 ஏப்ரல், 2010

16 வருடங்களுக்குப் பிறகு யாழ்ப்பாண மணிக்கூட்டுக் கோபுர வீதி திறக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 11.00 மணியளவில் சமூக சேவைகள் மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் யாழ்ப்பாணம் மணிக்கூட்டு கோபுர வீதியை பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைத்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)


  .

1995ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக பாதுகாப்புக் காரணங்களைக் கூறி போக்குவரத்திற்கு தடைசெய்யப்பட்டிருந்த இவ் வீதி திறந்து விடப்பட்ட நிகழ்வில் பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.


சுமார் 100 வர்த்தக நிலையங்கள் அவ் வீதியில் அமைந்திருந்தன. அப்பகுதியில் பெருமளவு மக்களின் குடியிருப்பும் அமைந்திருந்தது. இவ் வீதி மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால் தமது வீடுகளுக்கு சென்றுவரவும் வர்த்தக நிலையங்கள் மீண்டும் தமது வியாபார நடவடிக்கையை தொடர்வதற்கான வாய்ப்பும் கிடைத்துள்ளது. இதனால் சுமார் ஆயிரம் பேருக்கு தொழில் வாய்ப்புக்களும் கிடைக்கவுள்ளன.

ஏப்ரல் முதலாம் திகதி யாழ்ப்பாணம் வருகை தந்திருந்த ஜனாதிபதி அவர்களிடமிருந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பெற்றுக் கொண்ட பல கோரிக்கைகளில் தடைசெய்யப்பட்டிருக்கும் வீதிகளை மீண்டும் மக்கள் பாவனைக்கு திறந்து விடுவதும் ஒரு அம்சமாகயிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா யாழ் மாவட்டக் கட்டளைத் தளபதி பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை உட்படப் பலரும் கலந்து கொண்டனர்.













0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’