பாழடைந்த பகுதியொன்றுக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியொன்றுக்குள் வைத்து 14வயதான சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கிய சம்பவமொன்று சிலாபம், முந்தல் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடையதான சீனப் பிரஜை ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நுரைச்சோலை அனல் மின் நிலைய நிர்மாணத்துடன் தொடர்புடையதான பணிகளில் ஈடுபடுபவர் என்று பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான பிரஷாந்த ஜயக்கொடி தகவல் தருகையில் கூறியதாவது:
கடந்த ஆண்டே இந்த துஷ்பிரயோகச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான முறைப்பாடு நேற்று முன்தினம் புதன்கிழமையே முந்தல் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
முறைப்பாடு தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுத்த முந்தல் பொலிஸார் வியாங்கொடையிலுள்ள பிரதான அனல் மின் மத்திய நிலையத்தில் வைத்து குறித்த சீனப் பிரஜையைக் கைது செய்தனர்.
36 வயதான மேற்படி சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
-













.jpg)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’