-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்
;
புதன், 3 மார்ச், 2010
புலிகளின் நிதிப் பிரிவு தலைவர் கைது-ஜெனீவாவில் இருந்து கொழும்புக்கு வந்தபோது பிடிபட்டார்
கொழும்பு: ஜெனீவாவில் வசித்து வந்த புலிகளின் நிதிப் பிரிவு தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு வந்த இவரை போலீசார் கைது செய்ததாக இலங்கை வானொலி தெரிவித்துள்ளது.
இலங்கையில் போர் முடிவுக்கு வந்ததையடுத்து விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்த முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
புலிகளின் வெளியுறவுப் பிரிவு தலைவராக இருந்த குமரன் பத்மநாதன் என்ற கேபி மலேசியாவில் கைது செய்யப்பட்டார். இவர் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்காக வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்கள் கொள்முதல் செய்து வந்தவர்.
கொழும்பு கொண்டு வரப்பட்ட இவர் அங்கு ரகசிய இடத்தில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார். இவர் கொடுத்த தகவலின் பேரில் பல புலித் தலைவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இந் நிலையில் தற்போது புலிகள் இயக்கத்தின் மேலும் ஒரு முக்கிய தலைவர் பிடிபட்டுள்ளார்.
இவர் ஏதோ காரணத்துக்காக கொழும்புக்கு வந்ததாகவும் அப்போது அவரை இலங்கை போலீசார் கைது செய்துவிட்டதாக அந் நாட்டு ரேடியோ தெரிவித்துள்ளது.
இவர் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் தங்கியிருந்து புலிகள் இயக்கத்தின் சர்வதேச நிதிப் பிரிவை கையாண்டு வந்தார். மேலும் இயக்கத்துக்காக வெளிநாடுகளில் நிதியும் திரட்டி வந்தவர் என்று கூறப்படுகிறது.
ஆனால் அவரது பெயர் விவரத்தை இலங்கை அரசு வெளியிடவில்லை.
கடந்த ஜனவரி மாதம் 10ம் தேதியே அவர் கைது செய்யப்பட்டுவிட்டதார். ஆனால், இப்போது தான் அதை அரசு வெளியில் தெரிவித்துள்ளது.
விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர் கைதா? பெயரை வெளியிட மறுப்பது ஏன்?
விடுதலைப்புலிகளின் வெளியுறவு பிரிவு தலைவராக இருந்த குமரன் பத்மநாதன் என்கிற கேபி மலேசியாவில் கைது செய்யப்பட்டார்.
கொழும்பு கொண்டு வரப்பட்டு அங்கு ரகசிய இடத்தில் வைத்து அவரிடம் ராணுவ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் கொடுத்த தகவலின் பேரில் பல தலைவர்கள் கைது செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மேலும் ஒரு முக்கிய தலைவர் சிக்கியுள்ளார். இவர் சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் தங்கியிருந்தார். விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சர்வதேச நிதி பிரிவில் முக்கிய பொறுப்பு வகித்து வந்தார். இயக்கத்துக்கு வெளிநாடுகளில் பணம் திரட்டியவர்.
சொந்த வேலை காரணமாக கொழும்புக்கு வந்த அவரை இலங்கை போலீசார் கைது செய்தனர். கொழும்பு புறநகர் பகுதியில் டெகிவேலாவில் அவரது வீடு உள்ளது. அங்கு பதுங்கியிருந்தபோது பிடிபட்டதாக இலங்கை அரசின் ரேடியோ அறிவித்தது.
ஆனால் அவரது பெயரை இலங்கை அரசு வெளியிட வில்லை. கடந்த ஜனவரி மாதம் 10-ந்தேதியே அவர் கைது செய்யப்பட்டதாக சி.ஐ.டி. போலீசார் தெரிவித்தனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’