-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்
;
புதன், 3 மார்ச், 2010
நிதியானந்தாவின் ஆசிரமங்கள்-சூறையாடிய மக்கள்
சென்னை: சாமியார் நித்தியானந்தா, தமிழ் நடிகை ஒருவருடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ தொலைக்காட்சியில் ஒளிபரப்பானதையடுத்து தமிழகம் மற்றும் பெங்களூரில் உள்ள அவரது ஆசிரம கிளைகளை பக்தர்களும், பொதுமக்களும் அடித்து நொறுக்கினர்.
நித்யானந்தாவுக்கு எதிராக இந்து மக்கள் கட்சியும் போராட்டத்தில் குதித்துள்ளது.
இந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள சாமியாரின் ஆசிரமத்திற்கு விரைந்து வந்த இந்து மக்கள் கட்சியினர் ஆசிரமத்தைத் தாக்கினர். அங்கிருந்து நித்தியானந்தாவின் படங்களை கிழித்துத் தீயிட்டுக் கொளுத்தினர்.
திருவண்ணாமலை மாவட்ட இந்து மக்கள் கட்சித் தலைவர் சிவபாபு தலைமையில் அக்கட்சியினர் திடீரென ஆசிரமம் முன் வந்து நித்யானந்தருக்கு எதிராகக் குரல் எழுப்பினர்.
இதையடுத்து விரைந்து வந்த போலீஸார் சிவபாபு உள்ளிட்ட 10 பேரையும் கைது செய்து அப்புறப்படுத்தினர். ஆசிரமத்திற்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை அறிந்த உடன், ஏராளமான பக்தர்களும், பொதுமக்களும் பெங்களூரில் உள்ள ஆசிரமம் முன் குவிந்துவிட்டனர்.
ஆசிரமத்தை இழுத்து மூட வேண்டும் என்றும் போலிச் சாமியாரை கைது செய்ய வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரும் கலவரம் மூளும் அபாயம் இருப்பதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கடலூர் பகுதியில் நித்யானந்தருக்கு எதிராக பெரும் கலவரம் வெடித்துள்ளது. அவரது போஸ்டர்கள் கிழிக்கப்பட்டன. அவற்றின் மீது சாணியை அடித்தனர்.
புதுச்சேரியில் உள்ள இந்த சாமியாரின் யோகா மையம், ஆசிரமம் போன்றவை மக்களால் சூறையாடப்பட்டது. பொருட்கள் அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டன.
போலீசார் குவிக்கப்பட்டும் மக்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. சாமியாரின் படங்கள் பொருட்களுக்கு தீவைத்தனர்.
சீர்காழி சட்டணாதபுரத்தில் நித்தியானந்தா சாமியாரின் படங்களை பெட்ரோல் ஊற்றி இந்து மக்கள் கட்சியினர் எரித்தனர். சாமியாரின் பேனர், கட் அவுட்டுகளை எரித்து, அவரை கைது செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர்.
பெங்களூர் தலைமையகம் சூறை:
நித்யானந்தாவை கைது செய்யக் கோரி பெங்களூரில் உள்ள அவரது தலைமை ஆஸ்ரமம் முன் சில கன்னட அமைப்புக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந் நிலையில் சிலர் ஆஸ்ரமத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். அவர்களைத் தொடர்ந்து ஏராளமானவர்கள் உள்ளே புகுந்த ஆஸ்ரமத்தை அடித்து நொறுக்கினர்.
கைது செய்யக் கோரி கமிஷனரிடம் புகார் :
இந் நிலையில் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சிவசங்கர், சென்னை காவல்துறை ஆணையரிடம் ஒரு புகார் மனு அளித்தார்.
அதில், தமிழ் கலாச்சாரத்தை சீரழிக்கும் செயலை செய்துள்ளார் நித்தியானந்தா. இந்து சாமியார் என்ற போர்வையில் இந்து மதத்தை அவமதித்துள்ளார். அவர் மேலும் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டிருப்பது தெரிய வருகிறது. சாமியார் என்கிற போர்வையில் பல கோடிகளை சுருட்டியுள்ளார்.
எனவே இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
அதே போல கோவை போலீஸ் கமிஷ்னரிடமும் புகார் தரப்பட்டுள்ளது.
சிலைகள் உடைப்பு:
இதற்கிடையே குமரி மாவட்டம் உள்பட தமிழகத்தி்ல் சில இடங்களில் வைக்கப்பட்டிருந்த நித்யானந்தாவின் சிலைகள் அடித்து உடைக்கப்பட்டுள்ளன.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’