வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 11 மார்ச், 2010

சர்வதேச அரங்கில் இலங்கைக்கு கௌரவம்

2010 ஆம் ஆண்டிற்கான தைரியமிகு பெண்மணிக்கான விருது இலங்கையைச்சேர்ந்த ஜென்ஸிலா மஜீத் என்பவருக்கு கிடைத்துள்ளது. நேற்று இடம்பெற்ற விருது வழங்கும் வைபவத்தில் அமெரிக்க ராஜாங்கச்செயலாளர் ஹிலரி கிளின்டன், அமெரிக்க முதல் பெண்மணி மிஷெல் ஒபாமா ஆகியோருடன் ஜென்ஸிலா மஜீத் எடுத்துக்கொண்ட படம்.
அமெரிக்க இராஜங்கச் செயலாளர் ஹிலரி கிளின்டன் இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம் பெண்மணியான ஜான்சிலா மஜீத் என்பவருக்கு நேற்று விருது வழங்கி கௌரவித்துள்ளார். இந்த விருது வழங்கும் நிகழ்வு வொஷிங்டனிலுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் நடைபெற்றிருந்தது. இந்த விருது வழங்கும் நிகழ்வில் அமெரிக்க முதற் பெண்மணி மிச்சேல் ஒபமா கலந்துகொண்டு உரையாற்றினார். ஜான்சிலா மஜீத் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் 20 வருடகாலமாக இடம்பெயர்ந்த மக்கள் மத்தியில் பணியாற்றியமைக்காக சர்வதேச பெண்களுக்கான உயர் விருது கிடைத்துள்ளது. சர்வதேச பெண்களுக்கான உயர் விருது வழங்கும் 10 பேரைக் கொண்ட பட்டியலில் ஜான்சிலா மஜீத் என்பவரின் பெயரும் உள்ளடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’