புத்தளம் மாம்புரியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தை பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க நேற்று திறந்து வைத்தார்.செனக் தனியார் நிறுவனம் இந்த காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தை நிறுவியுள்ளது.
10 மெகா வோட் மின்சாரம் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றது.தற்போது 5 காற்றாலை மின் விசிறிகள் பொறுத்தப்பட்டுள்ளதுடன் இன்னும் மூன்று விசிறிகள் அடுத்த மாதம் முடிவடைவதற்குள் பொறுத்தப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் புத்தளம், குருநாகல் வீதியில் அமைந்துள்ள கல்லடி மின் விநியோக நிலையத்துக்கு வழங்கப்பட்டு,அங்கிருந்து விநியோகப் பணிகள் இடம்பெறும் என்றும் அவர் தெரிவித்தார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’