வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 20 மார்ச், 2010

ஜனாதிபதி நாளை திருமலைக்கு விஜயம்!



ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நாளை திருமலைக்கு விஜயம் செய்யவுள்ளார். பாதுகாப்பு படை அதிகாரிகளும், கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பொதுமக்களுமாக சுமார் 2000பேர் திருகோணமலைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
இவர்கள் தங்குவதற்கு வசதியாக நகரில் உள்ள பாடசாலைகள் பொறுப்பேற்கப்பட்டுள்ளன. வியாழக்கிழமை மாலை 4.30 மணிக்கு நகரில் உள்ள சிறீகோணேஸ்வரா இந்துக் கல்லூரி, புனித மரியாள் கல்லூரி, மெதடிஸ்த பெண்கள் கல்லூரி, வித்தியாலோக ராஜகீய வித்தியாலயம் என்பன பொலிசாரால் முதல்கட்டமாக பொறுப்பேற்கபட்டுள்ளன. இப்பாடசாலைகளில் பாதுகாப்பு தரப்பினர் தங்கவுள்ளனர். இதனால் இந் நான்கு பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இத்தினத்திற்கு பதிலாக எதிர்வரும் சனிக்கிழமை 27.03.2010 பதில் பாடசாலையை நடத்துமாறு கிழக்கு மாகாண கல்வி திணைக்களம் சம்பந்தப்பட்ட பாடசாலை அதிபர்களுக்கு கடிதம்மூலம் அறிவித்துள்ளது. ஜனாதிபதியின் திருகோணமலை விஜயம் காரணமாக நகரத்தில் நடைபெறவிருந்த சகல விளையாட்ட செயற்பாடுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’