வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 20 மார்ச், 2010

புலிகளினால் மறைத்து வைக்கப்பட்டிருந்த 435 கிலோ எடைகொண்ட பெரல் குண்டுகள் மீட்பு

Loogix.com. Animated avatars. புலிகளினால் மறைத்து வைக்கப்பட்டிருந்த 435 கிலோ எடைகொண்ட பெரல் குண்டுகளை விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர். 45 கலன் கொள்ளளவு கொண்ட இரண்டு பெரல்களில் தயாரிக்கப்பட்ட இவ்வெடி குண்டுகள் இரண்டும் புளியங்குளம் காட்டுப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன
. கைதாகி தடுத்துவைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவர் வழங்கிய தகவல் ஒன்றின் அடிப்படையிலேயே இக்குண்டுகள் இரண்டும் மீட்கப்பட்டன. முதலாவது குண்டு ரி.என்.ரி. வெடிபொருட்கள், இரும்பு துண்டுகள், இரும்பு குண்டுகள் நிரப்பப்பட்டு சுமார் 261 கிலோ எடைகொண்டது என்றும் இரண்டாவது குண்டும் இதேபோன்று ரி.என்.ரி. வெடிமருந்து மற்றும் இரும்புத் துண்டுகள் நிரப்பப்பட்டு சுமார் 174 கிலோ எடை கொண்டவையாகவும் இருந்தன என விசேட அதிரடிப்படையினர் தெரிவிக்கின்றனர். இக்குண்டுகள் வெடிக்கும் பட்சத்தில் 360 பாகைக்கு வெடித்துச் சிதறுவதுடன் பாரிய அழிவை ஏற்படுத்தியிருக்கும் எனவும் தெரிவித்தனர். இவ்விரு குண்டுகளுடன் ஜொனி பட்டா என்றழைக்கப்படும் 10 மிதிவெடிகளும் மீட்கப்பட்டுள்ளன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’